Sadha - அஜித்தை பற்றி ஒன்று சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை.. உண்மையை உடைத்த சதா

சென்னை: நடிகை சதா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சொல்லிக்கொள்ளும்படியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது . இதனையடுத்து ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்தார். மேலும் வைல்டு லைஃப் போட்டோகிராஃபியிலும் ரொம்பவே ஆர்வமாக இருந்துவருகிறார் சதா.

தெலுங்கில் 2002ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. அந்தப் படம் தெலுங்கில் அதிபுதிரி ஹிட்டடித்தது. படத்தை தேஜா இயக்கியிருந்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததை கவனித்த எடிட்டர் மோகன் தனது இரண்டு மகன்களையும் சினிமாவில் அறிமுகமாக்க இந்தப் படத்தை பயன்படுத்திக்கொண்டார்.

Actress Sadha Talks about Ajith Here is the full details


தமிழ் ஜெயம்: அதன்படி அதே பெயரில் தமிழில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. மோகனின் மூத்த மகன் ராஜா இயக்க, இளைய மகன் ரவி ஹீரோவாக நடித்தார். தெலுங்கு போலவே தமிழிலும் சதா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார். படம் தமிழிலும் மெகா ஹிட்டடித்தது. அதனையடுத்து ரவி ஜெயம் ரவியாக மாறி முன்னணி ஹீரோவாக தற்போது இருப்பது அனைவரும் அறிந்தது.

சதா: ஜெயம் படத்தின் வெற்றி சதாவையும் பலரிடம் கொண்டு போய் சேர்த்தது. ஹோம்லியான முகம், நல்லபடியான நடிப்பு என அவருக்கு திறமை இருந்ததால் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் அமைந்தன. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சதாவுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பாகவே நடித்தார். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விக்ரம் ஸ்கோர் செய்துவிட்டார்.

தொடர் வாய்ப்புகள்: சதாவும் அந்தப் படத்தில் கவனிக்கப்பட்டதால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தன. மாதவனுடன் பிரியசகி, அஜித்துடன் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. தமிழில் அவர் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

புகைப்பட கலைஞர்: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருக்கும் சதாவுக்கு காட்டுயிர்களை புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் அதிகம். அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்னமும் திருமணம் ஆகாத சூழலில் தனக்கு எந்த நடிகர் மேல் கிரஷ் இருக்கிறது என்பதை தெரிவித்திருக்கிறார்.

அஜித் மீது கிரஷ்: ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த விஷயத்தை வெளியில் சொல்லலாமா கூடாதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் திருப்பதி படத்தில் அஜித்துடன் நான் இணைந்து நடித்தபோது அவர் மீது எனக்கு எக்கச்சக்கமான கிரஷ் இருந்தது என்றார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதற்கிடையே திருப்பதி படத்தில் நடித்த நடிகர் பெஞ்சமின் அளித்த சமீபத்திய பேட்டியில், திருப்பதி படத்தின் ஷூட்டிங்கின்போது சதாவை பார்த்து அஜித் தன்னிடம் சூப்பர் ஃபிகர் வருது பார் என்று சொன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X