T ராஜேந்தருக்கு பதிலடி கொடுத்த சாய் தன்ஷிகா.. 10 வருடத்துக்கு பிறகா? நடிகை இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா?

சென்னை: நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி உள்ள படமான யோகிடா படம் இன்று முதல் அதாவது, பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ரிலீஸ் ஆகிறது. படத்தின் புரோமோஷன் வேலைகளில் சாய் தன்ஷிகா சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான படமான விழித்திரு படத்தின் புரோமோசனில் இயக்குநர் டி ராஜேந்திரன், சாய் தன்ஷிகா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. அது தொடர்பாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சாய் தன்ஷிகா பேசுகையில், விழித்திரு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த மேடையில் இருந்த இயக்குநர் டி ராஜேந்திரன் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன். அது தவறுதலாக நடைபெற்றது. ஆனால் அது தொடர்பாக இயக்குநர் டி ராஜேந்திரன் பேசியது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த மேடையில் எனக்காக யாருமே பேசாதது எனக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

Actress Sai Dhanshika Interview About How She Feels Very Bad After Director T Rajendran Worst Scolding

ஒரு வாரம்: அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு வாரம் நான் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. எல்லோருக்கும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் அது மத்தவங்கள அது காயப்படுத்துமா இல்லை என்பது அவர்களுக்கு தெரியமாட்டிங்குது. நான் பப்ளிசிட்டிக்காக அப்படி செய்தேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் பப்ளிசிட்டிக்காக அப்படி நடந்து கொண்டிருந்தால், நான் ஏன் ஒரு வாரம் வீட்டிற்குள் முடங்கி இருக்கப் போகிறேன்?" என்று தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு: இந்த சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகி இருந்தாலும், இது தொடர்பாக தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதால் சாய் தன்ஷிகா மனம் திறந்து பேசி உள்ளார். இல்லை என்றால் அவருக்கு ஏற்பட்ட வருத்தம் தொடர்பாக இப்போதும் பேசி இருக்க மாட்டார். மேலும் அந்த நிகழ்வில் தன்ஷிகா கால் மேல் கால் போட்டு அமர்ந்ததை எல்லாம் இயக்குநர் டி ராஜேந்திரன் மிகவும் கடுமையாக விமர்சித்தார். இயக்குநர் டி ராஜேந்திரன் இவ்வாறு விமர்சித்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. சாய் தன்ஷிகா நடிகர் விஷாலை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X