படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே தனக்கே உரிய பாணியில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சாய் தன்ஷிகா. இவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்துவிட்டதால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, ரசிகர்களை திணறவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை சாய் தன்ஷிகா. கடந்த 2006-ஆம் முதல் நடிக்க தொடங்கிய அவர், குறிப்பிட்ட இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த அளவே வருகிறது. இருப்பினும் கதைக்கு ஏற்றபடி நல்ல போல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

actress sai dhanshika latest glamour video trending on social media

நடிகை சாய் தன்ஷிகா: இவர் முதன் முதலில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார், ஆனால், அந்த கதாபாத்திரம், பேசப்படவில்லை. இதையடுத்து ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து, அரவான், பரதேசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்திருந்தது. அந்த கேரக்டரில் அனைவரும் மிரண்டு போகும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ரஜினியின் மகள்: இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "கபாலி" படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானார். அந்த படத்தில் டாம் பாய் லுக்கில் மிகவும் போல்டான பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.

இணையத்தில் கவர்ச்சி: நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்பு இல்லாததால், கடந்து மூன்று ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு ஆளே காணாமல் போன சாய் தன்ஷிகா, அவ்வப்போது சோஷியல் மீடியாவில் போட்டோக்களை பகிர்ந்து வந்தார். படவாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல கிளாமர் ரூட்டுக்கு மாறி கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.

படுமோசமான கவர்ச்சி: இணையத்தில் அவர் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்ததற்கு அவருக்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டது. தற்போது சாய் தன்ஷிகா The Proof என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில், வெறும் சட்டை அணிந்து கொண்டு நடிகருடன் படுக்கையறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். டிரெண்டாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் என்ன கன்றாவிடா இது என்று அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X