‘கருப்பு‘ படம் குறித்து சாய் தன்ஷிகா சொன்ன விஷயம்.. த்ரிஷாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மே 14ந் தேதி வெளியாக வேண்டிய படம் பைனான்ஸ் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல், நேற்று படம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே சாமி ஆடியதை பார்க்க முடிந்தது. படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து பார்த்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தியேட்டரிலேயே ரசிகர்கள் முன்னிலையில் ஆக்ரோஷமாக கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கருப்பு படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது. அதன்படி, இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் கருப்பு: 'கருப்பு' படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகை சாய் தன்ஷிகா தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். கருப்பு ஒரு அட்டகாசமான படைப்பு. விசில் அடித்து ரசிக்கக்கூடிய மற்றும் கைதட்டி கொண்டாடக்கூடிய காட்சிகள் படத்தில் ஏராளமாக இருக்கு. ஒரு நீதிமன்ற நாடகத்தை இவ்வளவு சுவாரஸ்யமாகவும், வணிக ரீதியாகவும் அமைப்பது என்பது ஆர்.ஜே.பாலாஜியால் தான் முடியும். இதுவே அவரின் தனித்துவமான பாணி. நடிகர் சூர்யா அவர்கள் 'வேட்டை கருப்பு' கதாபாத்திரத்தை முழுமையாக தன் வசப்படுத்தி படம் முழுவதும் கம்பீரம் குறையாமல், ஆளுமையை தக்க வைத்து இருப்பதை பார்க்க உண்மையிலேயே பிரம்மாண்டமாக இருந்தது.

த்ரிஷாவின் ரியாக்ஷன்: நடிகை த்ரிஷா இந்தப் படத்திற்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக உள்ளார். அதே போல சாய் அபயங்கரின் இசையையும் நான் வெகுவாக ரசித்தேன். ஒளிப்பதிவும் சூப்பர். கருப்பு படம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி படமாகும் என்று நடிகை சாய் தன்ஷிகா பதிவிட்டுள்ளார். இதற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் த்ரிஷா இருவரும் நன்றி என பதிவிட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் நடிகை த்ரிஷா, சாய் தன்ஷிகாவின் இந்த பதிவினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications