Sai pallavi: அவங்களோட டான்ஸ் ஆடுறது ரொம்ப பிடிக்கும்.. ஆனாலும் விஜய்தான் பெஸ்ட்.. சாய் பல்லவி ஓபன்!
சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி நடித்து வருகிறார். தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தனக்கு நடிக்க அதிகமான ஸ்கோப் உள்ள படங்களில் நடித்துவரும் சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அமரன் படம் மிகச் சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் இணைந்து அவர் இந்து என்ற கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் நாக சைத்தன்யாவுடன் இணைந்து சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் படம் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்திலும் சாய் பல்லவி அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் சிறப்பாக செய்லபட்டுவருகிறார் சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சாய் பல்லவி. கடந்த ஆண்டில் சாய் பல்லவி -சிவகார்த்திகேயன் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான அமரன் படம் மிகச் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பு மிகுந்த பாராட்டுகளுக்கு உள்ளானது. அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் ஆருடம் சொல்லப்பட்டது.
தண்டேல் படம்: இந்நிலையில் இன்றைய தினம் நாக சைத்தன்யாவுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படம் ரிலீசாகியுள்ளது. இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முன்னதாக இந்த படத்தின் பிரமோஷன்களில் நாக சைத்தன்யா - சாய்பல்லவி இருவரும் இணைந்து அடுத்தடுத்து செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய சாய் பல்லவி பேட்டி ஒன்றில் தனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பாக நடனம் சிறப்பாக ஆடத் தெரிந்தவர்களுடன் இணைந்து ஆடுவது மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் டான்ஸ்தான் சூப்பர்: தமிழில் நடிகர் விஜய் தான் மிகச் சிறப்பான டான்ஸர் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார். ப சாய் பல்லவியின் நடனம் மிகச் சிறப்பான பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக இவர் விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த நிலையில் மாரி படத்தில் தனுசுடன் இணைந்து இவர் ஆட்டம் போட்ட பாடலும் தொடர்ந்து youtube-ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் டான்ஸ் குறித்து சாய்பல்லவியின் இந்த பேட்டி சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சாய்பல்லவி விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக நடிகர் நாக சைத்தன்யா பிரமோஷனின்போது தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கனவு: ஒரு நாள் தன்னுடைய கனவு நிறைவேறும் என்றும் அந்த படத்தில் தனக்கு முக்கியமான கேரக்டர் கொடுப்பதாக சாய் பல்லவி வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் நாக சைத்தன்யா மேலும் தெரிவித்துள்ளார். விரைவில் சாய் பல்லவி இயக்குநர் ஆவார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. கவர்ச்சி காட்டாமல் நடித்துவந்தாலும் தொடர்ந்து பிசியாகவே நடித்து வருகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











