அழகே பொறாமைப்படும் பேரழகு...பாரம்பரிய உடையில் அம்சமா இருக்கும் சாய்பல்லவி!

சென்னை : நடிகை சாய்பல்லவி குல தெய்வ கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து வழிபாடு நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிராண்டாகி உள்ளது.

சாய் பல்லவியை பலருக்கும் மலர் டீச்சராகத்தான் தெரியும் அந்த அளவுக்கு பிரேமம் படத்தில் இயல்பாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

ரவுடி பேபி சாய்பல்லவி

ரவுடி பேபி சாய்பல்லவி

மாரி 2 படத்தில் தனுஷூடன் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். அந்த பாடலுக்கு பிறகு ஏ ரவுடி பேபி என, அனைவரையும் கொஞ்சும் அளவுக்கு, தரமான குத்தாட்டத்தை போட்டிருந்தார். இன்று வரை இந்த பாடல் டிரெண்டிங்காகத்தான் உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி, சமந்தாவின் கணவர் நாக சைத்தான்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய்,விராத பர்வம் , கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில்,கார்கி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை அனைவரும் பாராட்டு வகையில் இருந்தது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.

குல தெய்வ கோவிலில்

குல தெய்வ கோவிலில்

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி, தனது குல தெய்வ கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை அடுத்த படுகர் கிராமத்தில் உள்ள எத்தை அம்மன் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தார். அந்த புகைப்படத்தில் பூஜா கண்ணன், சகோதரர் ஜித்து ஆகியோரும் உள்ளனர்.

தங்கையும் நடிகைதான்

தங்கையும் நடிகைதான்

சாய்பல்லவியின் தங்கையான பூஜா ஸ்டண்ட் சில்வா இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஏற்கனவே ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதனால், இப்படத்திற்கு கதை, வசனத்தை ஏ.எல்.விஜய்யே எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X