Sai Pallavi: அமர்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த சாய் பல்லவி.. க்யூட் கிளிக்ஸ்!
சென்னை: நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
இந்த முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இவரது மலர் கேரக்டர் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய் பல்லவி. இவர் விரைவில் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமர்நாத் யாத்திரையை மேற்கொண்ட நடிகை சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டில் வெளியான மலையாள படமான பிரேமம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, இவர் சினிமாவில் நடிக்க வந்தவர். தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, தொடர்ந்து துல்கர் சல்மானுடன் கலி, வருண் தேஜ்ஜுடன் பானுமதி போன்ற படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து முன்னணி நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார்.
கடந்த 2017ம் தேதி தெலுங்கிலும் இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். முன்னதாக விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் சாய் பல்லவி. தெலுங்கு தொலைக்காட்சயின இடிவியில் தி அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்தே இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சாய் பல்லவி தற்போது முன்னணி நடிகை.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தன்னை சிறப்பான நடிகையாக நிலைநிறுத்தியுள்ள போதிலும் சாய் பல்லவி, விரைவில் சினிமாவில் இருந்து விலகி, மருத்துவத்துறையில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது காஷ்மீரில் உள்ளார் சாய் பல்லவி.
இந்நிலையில் சாய் பல்லவியின் ரீசண்ட் கிளிக்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படங்களில் தலையில் முக்காடு போட்டபடியும், ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்தபடியும் சாய் பல்லவி காணப்படுகிறார். அவர் தற்போது அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பயணத்தின்போது அவர் எடுத்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி கமிட்டாகியுள்ள எஸ்கே21 படத்திற்காக தற்போது அவ் காஷ்மீரில் முகாமிட்டுள்ளார். முன்னதாக படத்தின் பூஜையின்போது சாய் பல்லவி கலந்துக் கொண்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாய் பல்லவியின் சிரிப்பு, அழகான முடி போன்றவை ரசிக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தனுஷுடன் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடலுக்காக இவர் ஆடிய நடனமும் சர்வதேச அளவில் ட்ரெண்டானது. அதிக வியூஸ்களையும் பெற்றது.


Click it and Unblock the Notifications











