கிளாசிக்கல் டான்ஸிலும் பிச்சு உதறும் நடிகை சாய் பல்லவி!
சென்னை: நடிகை சாய் பல்லவி இப்பொழுது தெலுங்கில் பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்
மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அபாரமான நடிப்பின் மூலம் தென்னிந்திய துறையில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார்.
சாய்பல்லவி நடனத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாக இருக்க இப்பொழுது கிளாசிக்கல் டான்ஸிலும் பட்டையை கிளப்பும் அட்டகாசமான வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார்

நடிப்புக்கு முக்கியத்துவம்
தென்னிந்திய சினிமாவில் தற்போதைக்கு அனைவருக்கும் பிடித்த மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. நடிகைகள் பெரும்பாலும் முன்னணி நட்சத்திரம் என்ற இடத்தை பெற்றவுடன் கவர்ச்சி காட்ட தொடங்கி விடுவார்கள் ஆனால் நடிகை சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.குறிப்பாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் கவர்ச்சி இதுவரை காட்டாமலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் ஆட்டிப் படைத்து வருகிறார்

இரட்டை வேடத்தில்
தமிழில் மாரி 2 , என் ஜி கே என ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளது அந்த வகையில் நடிகர் நானி இரட்டை வேடத்தில் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதில் நடிகை சாய் பல்லவி தேவதாசியாக வாழ்ந்து பிரமாதப் படுத்தியிருப்பார். இவ்வாறு தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சாய்பல்லவி மிக விரைவிலேயே தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மலைவாழ் பெண்ணாக
விராட பருவம் என்ற படத்தில் பழங்குடியின மலைவாழ் பெண்ணாக சாய்பல்லவி நடித்திருக்க இந்த படத்தில் ராணா ஹீரோவாக நடித்து வருகிறார். பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமும் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாய்பல்லவி இதுவரை பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை அறிமுக திரைப்படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் நிலைத்து நிற்கிறது.
Recommended Video

கிளாசிக்கல் டான்ஸிலும்
அனைத்து வகையான நடனத்திலும் பட்டையை கிளப்பும் சாய்பல்லவி கிளாசிக்கல் நடனத்தையும் விட்டுவைக்கவில்லை. நண்பர்களுடன் அட்டகாசமான கிளாசிக்கல் டான்ஸ் ஆடி ஒத்திகை பார்த்த வீடியோவை சாய்பல்லவி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். இப்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது


Click it and Unblock the Notifications











