பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சாய் பல்லவி.. தாறுமாறு அப்டேட்!
மும்பை : நடிகை சாய் பல்லவி இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதுவரை தென்னிந்தியாவை மட்டும் கலக்கிக் கொண்டிருந்த சாய்பல்லவி இப்பொழுது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தாறுமாறு அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில்
ரசிகர்களால் ரவுடிபேபி என அழைக்கப்படும் நடிகை சாய் பல்லவி தொட்டதெல்லாம் பொன்போல நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மலையாளத்தில் வெளியாகி மெஹா ஹிட் வெற்றி பெற்ற பிரேமம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய்பல்லவி அதன்பிறகு தமிழ்,தெலுங்கில் அறிமுகம் கொடுத்தார்.

முன்னணி நடிகை
தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு மிக குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பாடி பாடி லேச்சே மனசு போன்ற படங்களைத் தொடர்ந்து நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, மீண்டும் நானியுடன் இணைந்து ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் என் ஜி கே
லவ் ஸ்டோரி சில மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்தது ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் என் ஜி கே படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் சாய் பல்லவி கமிட்டாகவில்லை என்பது ரசிகர்களுக்கு ஒருபுறம் கவலையாக இருந்தாலும் பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு ஆறுதல் ஆனது.

கதைக்கு முக்கியத்துவம்
இவ்வாறு தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் சாய்பல்லவிக்கு பாலிவுட்டில் இருந்தும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளதாம். ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் சாய் பல்லவி மிக விரைவிலேயே அதில் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











