நடுக்காட்டில் அந்தரத்தில் தொங்கும் சாய் பல்லவி.. இதுக்கு பேரு தான் டர்வின்ஸ் தியரி!

சென்னை : தனது சுட்டித்தனமான நடிப்பால் சினிமா ரசிகர்களின் ரவுடிபேபியாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழில் NGK திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் தயாரிக்கும் அந்தொலஜி திரைப்படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு மிக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி இப்பொழுது நடுக்காட்டில் அந்தரத்தில் தொங்கியவாறு அதற்கு புது விளக்கம் வேற கொடுத்திருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மிகவும் வித்தியாசமானவர்

மிகவும் வித்தியாசமானவர்

மற்ற நடிகைகளைப் போல அல்லாமல் தான் நடிக்கும் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய் பல்லவி இப்போதுள்ள இளம் நடிகைகளிலேயே மிகவும் வித்தியாசமானவர்.

யூடியூபில் அதிக பார்வையாளர்கள்

யூடியூபில் அதிக பார்வையாளர்கள்

தனுஷுடன் இவர் நடித்த "மாரி 2" திரைப்படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து உலகளவில் மிகப்பெரிய வைரல் ஆன நிலையில் இப்பொழுது யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்திய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பலரது கண்களும்

பலரது கண்களும்

இவர் நடிக்கும் திரைப்படங்களில் நடிப்பு எந்த அளவுக்கு பேசப்படுகிறது அதே அளவுக்கு இவரது நடனமும் மிக பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் ரவுடி பேபி பாடலில் பலரது கண்களும் இவரை மட்டுமே பார்த்தது என்றால் அது மிகையாகாது.

முன்னணி இயக்குனர்களுடன்

முன்னணி இயக்குனர்களுடன்

இவ்வாறு வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இப்பொழுது தெலுங்கில் "லவ் ஸ்டோரி" மற்றும் "விராட்ட பர்வம்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருவதையொட்டி பல்வேறு பிரபலமான ஓடிடி நிறுவனங்களின் தயாரிப்பில் அந்தொலஜி திரைப்படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

செம ஜாலியான

செம ஜாலியான

இவ்வாறு தமிழ் ரசிகர்கள் பலரும் இவரின் அடுத்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சாய் பல்லவி நடுக்காட்டில் அந்தரத்தில் தொங்கியவாறு வெளியிட்டுள்ள செம ஜாலியான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் இதயங்களை லைக்குகளாக பெற்று வருகிறது.

ஊஞ்சல் ஆடியவாறு

ஊஞ்சல் ஆடியவாறு

நீரோடையின் மேலே தொங்கும் கிளையைப் பிடித்து ஊஞ்சல் ஆடியவாறு சாய்பல்லவி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு " டர்வின்ஸ் தியரி" மெய்ப்பிக்கப்பட்டது என தலைப்பிட்டுள்ளார். அதை பார்த்த இவரது ரசிகர்கள் நாங்க எங்க டர்வின்ஸ் தியரி பாத்தோம் நாங்க உங்களை மட்டும் தானே பார்த்தோம் என செல்லமாக கொஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X