வெண்ணிலவே உந்தன் முன்னால் தோற்றுப்போகும்... சாய்பல்லவியின் ஹோம்லி லுக் பிக்ஸ் வைரல் !

சென்னை : தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை சாய் பல்லவி

நடிப்பு, நடனம் என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி வெண்ணிலவே தோற்றுப் போகும் அளவிற்கு கொள்ளை அழகுடன் உள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகிறது.

ஹீரோயினாக அறிமுகமான

ஹீரோயினாக அறிமுகமான

நடிகை சாய்பல்லவி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல அதேசமயம் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்படும் இவரது நடிப்பு மற்றும் நடனத்திற்கு அடிமையானவர்கள் பலர். மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சென்சேஷனல் ஹிட்டடித்த பிரேமம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய்பல்லவி அதற்கு முன்பாகவே தாம்தூம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறு வேடத்தில் வந்து சென்றுள்ளார்

காதல் கதை களத்தில்

காதல் கதை களத்தில்

தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பேராதரவை பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில் தெலுங்கு திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வரும் இவருக்கு கடைசியாக லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. நாக சைதன்யா ஹீரோவாக நடித்த திரைப்படம் காதல் கதை களத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது

ஷியாம் சிங்கா ராய்

ஷியாம் சிங்கா ராய்

தமிழில் என் ஜி கே மற்றும் மாறி2 என இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள சாய்பல்லவி தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மிடில் கிளாஸ் அப்பாயி வெற்றியை தொடர்ந்து நானி உடன் இணைந்து நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் விரைவில் வெளியாக உள்ளது . இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது நிகழ்காலம் மற்றும பூர்வ ஜென்மம் என இருவேறு கதைகளின் அடிப்படையில் ஷியாம் சிங்கா ராய் உருவாகி உள்ளது.

Recommended Video

Chithirai Sevvaanam Sai Pallavi sister Pooja kannan about Samuthirakani | Filmibeat Tamil
வெண்ணிலவே தோற்றுப் போகும் அழகு

வெண்ணிலவே தோற்றுப் போகும் அழகு

ரசிகர்களால் ரவுடிபேபி என செல்லமாக அழைக்கப்படும் சாய் பல்லவி தமிழில் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லை என்றாலும் இதுவரை கவர்ச்சிக் குரிய அல்லது சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடாமல் உள்ள சாய்பல்லவி இப்பொழுது வெண்ணிலவே தோற்றுப் போகும் அளவிற்கு பேரழகாக உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X