அதை செய்யற அளவிற்கு என்கிட்ட பணம் இருக்கு.. உற்சாகமாக சொன்ன சாய் பல்லவி!
சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ். தெலுங்கு. மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது முதல் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த படம் கொடுத்த மிகப்பெரிய அட்ராக்ஷனில் சாய் பல்லவிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
மருத்துவராக இருந்த போதிலும் நடனத்திலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்டு அதில் திறம்பட செயல்பட்டு வரும் சாய்பல்லவி, தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி இணைந்துள்ள அமரன் படம் இம்மாத இறுதியில் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது.

நடிகை சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவியின் க்யூட்டான பயணம் பிரேமம் படத்தில் துவங்கியது/ இந்த படத்தில் மலர் டீச்சராக ஏராளமான ரசிகர்களை மயக்கிய சாய் பல்லவி தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களுக்கு இவர் தொடர்ந்து சிறப்பான என்டர்டைன்மென்ட்டை கொடுத்து வருகிறார். இதனிடையே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரன் படம்: இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. புத்தம் புது மலராக அனைவரையும் கவரும் வகையில் இந்த வீடியோ அமைந்திருந்தது.ராணுவ வீரர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கி உள்ள நிலையில், ராணுவ வீரராக சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியான நிலையில் இவர்கள் இருவரின் இடையிலான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழு மிகச் சிறப்பாக துவங்கியுள்ளது.

சாய் பல்லவி பேட்டி: இந்நிலையில் தற்போது சாய் பல்லவி கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். தான் சிறுவய வயதில் நடுத்தர குடும்பத்தில் இருந்த நிலையிலும் தான் தன்னுடைய குடும்பத்தை பணக்கார குடும்பம் என்று நினைத்துக் கொண்டிருந்ததாகவும் அந்த வகையில் மற்றவர்களுக்கு உதவி செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தான் சிறப்பான இடத்தில் உள்ளதாகவும் இதை தான் ஆசீர்வாதமாக கருதுவதாகவும் சாய்பல்லவி மேலும் கூறியுள்ளார். படங்களில் மட்டும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான லுக்கை கொடுத்து வருகிறார் சாய் பல்லவி. சாய் பல்லவி ட்ரீட்: பொது நிகழ்ச்சிகளில் புடவை அணிந்து கொண்டு செல்வதே தனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். சில நிமிடங்களில் தான் புடவையை கட்டி விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புடவையில் அதிகமான மேக்கப் இல்லாமல் சாய் பல்லவி பொது நிகழ்ச்சிகளில் இயல்பாக பங்கேற்பது அவரது ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட்டாக அமைந்து வருகிறது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சாய் பல்லவி,


Click it and Unblock the Notifications











