Sai Pallavi: பசங்களை நான் நம்பமாட்டேன்.. சாய் பல்லவி என்ன இப்படி சொல்லிட்டாங்க!

சென்னை: நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு அமரன் படத்தின் திரைக்கதையை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் சாய் பல்லவி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் அவரது பிரஷ்னெஸ் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழில் தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ள போதிலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்

sivakarthikeyan sai pallavi amaran movie

நடிகை சாய் பல்லவி: நடிகர் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை சாய் பல்லவி. தமிழில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட சில நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மருத்துவரான சாய்பல்லவி தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களில் மட்டுமே நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி, இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.


ஆண்கள் குறித்து சாய் பல்லவி: தனியாகவும் பல இன்டர்வியூக்களை சாய் பல்லவி கொடுத்து வருகிறார். மிகவும் அழகான நாயகியாக தன்னுடைய முதல் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் ஏராளமான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் சாய் பல்லவி. தற்போது அமரன் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்ட அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பெண்கள் தான் அழகாக இருப்பதாக கூறினால் நம்புவேன் என்றும் ஆனால் ஆண்கள் தான் அழகாக இருப்பதாக கூறினால் தான் நம்ப மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மாறுபட்ட கருத்திற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார். ஆண்களுக்கு எல்லா பெண்களும் அழகாகத் தான் தெரிவார்கள் என்று சாய் பல்லவி கூறியுள்ளது இளைஞர்களை கடுப்பேற்றியுள்ளது.

சாய் பல்லவி இன்ட்ரோ வீடியோ: அமரன் படத்தில் மேஜர் முகுந்தனின் பயோபிக்கை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸ் என்ற நிஜ கேரக்டரை பிரதிபலித்துள்ளார் சாய் பல்லவி. முன்னதாக அவரது கேரக்டர் இன்ட்ரோ வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதில் புத்தம் புது மலராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சாய் பல்லவி. தொடர்ந்து படத்தின் பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடல்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


அமரன் படம்: பிரேமம் படத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் முதல்முதலில் களமிறங்கி தன்னை சிறந்த நடிகையாக வெளிப்படுத்தினார் சாய் பல்லவி. தொடர்ந்து தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத நடிகையாக, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதிகமான படங்களில் நடிக்காமல் கேரக்டருக்கு முக்கியத்துவம் தந்து நடித்துவரும் சாய் பல்லவிக்கு அமரன் படம் கேரியர் பெஸ்ட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோவிற்கு சமமான முக்கியத்துவம் அவருக்கு இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X