நானும் என் அப்பா அம்மாவும் ரொம்பவே எமோஷனல் ஆயிட்டோம்.. சில்லுக்கருப்பட்டியை புகழ்ந்த பிரபல நடிகை!
சென்னை: சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்து நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ஹலிதா ஷமீமை பாராட்டிய மெஸேஜ் வைரலாகி வருகிறது.
Recommended Video
சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

சில்லுக்கருப்பட்டி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டு மழை பொழிந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கின் பெரும்பாலான நேரம் எனக்கு மன அழுத்தத்தை தருகிறது. அந்த நேரத்தில் எனக்கு தேவதை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக கூறி சாய் பல்லவி அனுப்பிய மெசேஜை போட்டோ எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சாய் பல்லவியின் மெஸேஜில், ஹலோ ஹலிதா, படம் பார்த்து முடிந்ததும் நானும் எனது பெற்றோரும் ரொம்வே எமோஷனல் ஆகிவிட்டோம். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு நன்றி.
இது போன்ற பல ரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களுக்கு என்னுடைய அன்பும், பிரார்த்தனைகளும் என கூறியுள்ளார். சாய் பல்லவியின் இந்த மெஸேஜ் என்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











