கலைநிகழ்ச்சிகளில் புடவை மட்டுமே கட்டும் சாய் பல்லவி.. என்ன காரணம்னு தெரியுமா?

ஐதராபாத் : நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி இவருக்கு சிறப்பாக அமைந்தது.

இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அழகாக சேலையில், லூஸ் ஹேரில் இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார் சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த தெறி ஹிட் கொடுத்து வருகிறார். இவருக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது அனைத்து படங்களும் ஓரளவிற்கு ஹிட் கொடுத்து விடுகின்றன.

சிறப்பான நடனம்

சிறப்பான நடனம்

குறிப்பாக இவரது நடனம் இவரை ரசிகர்களிடையே மாசாக காட்டி வருகிறது. தனுஷுடன் மாரி படத்தில் இவர் போட்ட நடனம் தற்போது வரை சமூகவலைதளங்களில் வைரலாகவே காணப்படுகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கார்கி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வெற்றியும் பெற்றது.

கார்கி படம்

கார்கி படம்

தன்னுடைய தந்தையை மீட்பதற்காக போராடும் இளம்பெண்ணை இந்தப் படத்தில் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் சாய் பல்லவி. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி

சிவகார்த்திகேயனுடன் ஜோடி

இதனிடையே தற்போது சிவகார்த்திகேயனுடன் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்காத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ் என்று பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி.

விழாக்களில் புடவை அணிந்து பங்கேற்பு

விழாக்களில் புடவை அணிந்து பங்கேற்பு

படத்தின் பூஜைகள், கலைநிகழ்ச்சிகள், இசை வெளியீடு என அனைத்து நிகழ்ச்சிகளில் சாய் பல்லவியை புடவையிலேயே காண முடிகிறது. இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். தான் கல்லூரியில் ஒரு கலைநிகழ்ச்சியில் நடனம் ஆடும்போது தொடை தெரியும் வகையில் உடை உடுத்தியதாகவும் பிரேமம் வெளியீட்டின்போது இந்த வீடியோ வெளியாகி விமர்சனங்களை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சங்கடங்களை சந்தித்த சாய் பல்லவி

சங்கடங்களை சந்தித்த சாய் பல்லவி

கல்லூரி விழாவின் இந்த வீடியோவால் தான் சங்கடங்களை சந்திக்க நேர்ந்ததாகவும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதையடுத்தே தான் வெளி நிகழ்ச்சிகளில் புடவை கட்டும் முடிவை மேற்கொண்டு அதை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நம்முடைய தோலும் நமது மற்றொரு துணி போன்றதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X