விஜய் கூட சீக்கிரம் நடிப்பேன்.. ஆனால் கதை நல்லா இருக்கனும்.. சாய் பல்லவி நச் பதில்!

சென்னை : நடிகர் விஜய் கூட சீக்கிரம் நடிப்பேன் என்று நடிகை சாய் பல்லவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து இளைஞர்கள் மனதை ஈர்த்தவர் சாய் பல்லவி. இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மொழிகளை கடந்து ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார்.

சாய் பல்லவி தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாக உள்ள கார்கி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தற்போது கைப்பற்றியுள்ளது.

வசீகரமான முகம்

வசீகரமான முகம்

பெண்களுக்கு முகத்தில் பருக்கள் இருந்தால் அது முக வசீகரத்தை கெடுத்துவிடும் என்பார்கள். ஆனால், அந்த முகப்பருவே அழகாக தெரிவது சாய் பல்லவியின் முகத்தில் தான். மருத்துவத்தில் பட்டம் பெற்றாலும் நடனத்தின் மீது இருந்த காதலால் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, கஸ்தூரிமான், தாம்தூம் திரைப்படங்களில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் பல்லவி, பிரேமம் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதையாக மாறினார்.

தனுஷூடன் மாரி2

தனுஷூடன் மாரி2

தமிழில் தனுஷூடன் இணைந்து மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடலில் தனுஷை விட தாறுமாறாக குத்தாட்டம் போட்டிருந்தார். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வலம் வந்த சாய் பல்லவி அனைவரும் வாய்பிளக்கும் ரவுடி பேபி பாடலில் செம ஆட்டம் போட்டிருந்தார்.

துணிச்சலான பெண்

துணிச்சலான பெண்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் சாய் பல்லவி, ராணாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் விராட பர்வம். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக சாய் பல்லவி நடித்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கார்கி

கார்கி

சாய் பல்லவி தற்போது கார்கி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ளது. இதில், கார்கி என்கிற பெண்ணுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையிலான பயணமாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

நிச்சயம் நடிப்பேன்

நிச்சயம் நடிப்பேன்

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாய் பல்லவி, கார்கி படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது, ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி மனதிற்குள் இருக்கும் என்றார். மேலும், தளபதி விஜய்யுடன் இணைந்த நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் விஜய்யின் தீவிர ரசிகை நல்ல கதை அமைந்தால் நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன் ஆனால் கதை நன்றாக இருக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X