பருக்களாக இருந்த என் முகம்.. இப்படித்தான் பளபளப்பாச்சு.. அழகின் சீக்ரெட்டை சொன்ன சாய் பல்லவி!
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார். அழகான க்யூட்டான நடிகையான இவர் தனது பளபளக்கும் சருமத்திற்கான ரகசியத்தை ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி தனுஷுடன் சேர்ந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில், தனுஷ்,சாய் பல்லவி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் சூப்பரோ சூப்பர். அந்த பாடலுக்கு பிறகு பலர் அவரை ரவுடி பேபி என, கொஞ்சும் அளவுக்கு, தரமான ஆட்டத்தை போட்டிருந்தார். இன்று வரை இந்த பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்: தனது திறமையான நடிப்பால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி, சமந்தாவின் கணவர் நாக சைத்தான்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில், கார்கி படத்தில் சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.

சரும பாதுகாப்பு: இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சரும பராமரிப்பு குறித்து தனது ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். அதில், நான் பிரேமம் படத்தில் நடிக்கும் போது என் முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தது. அந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வந்ததே அதனால் தான். ஆனால், இப்போது என் முகத்தில் எந்த பருவும் இல்லை இதற்கு என்ன சிகிச்சை செய்தீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நான் இதற்காக சிகிச்சையோ அல்லது எந்த ஒரு தெரபியோ செய்யவில்லை.

இதுதான் காரணம்: டீன் ஏஜ் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் முகப்பரு வருவது என்பது சாதாரணமான விஷயம். இதற்காக நாம் பயப்பட தேவையில்லை. இதற்காக எந்த சிகிச்சையும் பயன்படுத்த வேண்டாம், அதுவாக வரும் அதுவாக போய்விடும். நான் எதுவும் செய்யாமல் இருந்தது தான் என் முக பளபளப்பிற்கு காரணம் என்று நடிகை சாய் பல்லவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கூந்தலின் ரகசியம்: அதே போல, கூந்தலின் ரகசியம் குறித்து பேசிய அவர், நான் இயற்கை மீது நம்பிக்கை கொண்டவள் எப்போதும் இயற்கையான உணவையே விரும்பி சாப்பிடுவேன். செயற்கை அழகு பொருள்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்னுடைய கூந்தலுக்கு கற்றாழையை பயன்படுத்துவேன். கூந்தலின் உற்ற நண்பன் கற்றாழை தான். தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இது முடி வளர்ச்சியை தூண்டும் என்று தனது நீண்ட கூந்தலின் ரகசியத்தை கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.



Click it and Unblock the Notifications











