Sai pallavi: இந்து ரெபெக்கா வர்கீஸாக மாறிய சாய் பல்லவி.. அமரன் படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ள அமரன் படம் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் RKFI நிறுவனம் தயாரித்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் அமரன் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முன்னதாக படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இன்னும் இரு தினங்களில் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மிக சிறப்பாக அமைந்து வருகிறது.

sivakarthikeyan amaran movie sai pallavi


அமரன் படம்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது தீபாவளியை ஒட்டி கொண்டாட்டத்துடன் இந்த படம் ரிலீசாகவுள்ளது. மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் காஷ்மீரில் எடுக்கப்பட்ட நிலையில் முன்னதாக இந்த படத்தின் ட்ரெய்லர், டீசர், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கொண்டாட செய்துள்ளன. தமிழில் அதிகமாக பயோபிக் உருவாகாத நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் பல்லவி கேரக்டர்: அமரன் படத்தில் மேஜர் முகுந்திற்கு இணையான கேரக்டரை அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் பெற்றுள்ளார். முகுந்த் மற்றும் இந்து இடையிலான காதலை இந்தப் படம் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இவர்களின் கல்லூரி காலம், கணவன் -மனைவியாக இவர்களின் ரொமான்ஸ் உள்ளிட்டவை இந்த படத்தில் ராணுவ காட்சிகளுக்கு இணையான கவனத்தை பெற்றுள்ளன. முதலில் இந்துவின் அறிமுக வீடியோவை வைத்து தான் படக்குழுவினர் படத்தின் பிரமோஷன்களை துவங்கினர். அந்த வகையில் இந்த படத்தில் ஹீரோயினுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

sivakarthikeyan amaran movie sai pallavi

சாய் பல்லவி சம்பளம்: இந்தப் படத்தில் ஒரிஜினலாகவே இந்து ரெபெக்காவை கண்முன்னே கொண்டு வரும் கேரக்டர் வடிவமைப்பை சாய் பல்லவி பெற்றுள்ளார். இந்த படத்தில் கணவன் -மனைவியாக மட்டுமில்லாமல் ஒரு குழந்தைக்கு பெற்றோராகவும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ளனர். மேலும் கணவனை இழந்த மனைவியாகவும் சாய்பல்லவி கேரக்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு சம்பளமாக மூன்று கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படும் வகையிலான படங்களை மட்டுமே சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சாய் பல்லவி கேரியர் பெஸ்ட்: அந்த வகையில் சாய் பல்லவி கேரியர் பெஸ்ட்டாக அமரன் படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் மிகவும் ஃபிரெஷ்ஷாக காணப்படுகிறார் சாய் பல்லவி. ஒரு ராணுவ வீரரின் மனைவியாக, காதலியாக, ஒரு அம்மாவாக பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியுள்ளர். இந்த தீபாவளி பந்தயத்தில் அமரன் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X