நீச்சல் குளத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜாலி குளியல்.. கவுண்ட மணி டயலாக்கை வைத்து கலாய்த்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் ஜாலி குளியல் போட்ட பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்ஸ் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

Recommended Video

Kajal Agarwal Replaces Trisha Role | Acharya | Cirenjeeve

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சில டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் அந்நிகழ்ச்சியில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததால் அவரை சில நெட்டிசன்கள் ஸ்னேக்ஷி என்று அழைத்து கடுமையாக விமர்சித்தனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்ட சாக்ஷி தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். வெளியே வந்த வேகத்தில் பிகினியில் போட்டோ ஷுட் நடத்திய சாக்ஷி, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்சிசி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கோவா போக வேண்டும்

தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். கோவாவில் உள்ள ஐடிசி ஹோட்டலில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். மேலும் மீண்டும் கோவா செல்ல வேண்டும் குளிர்ச்சியான நீரில் பிரஷாக வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேக்கப் அழிந்துவிடுமா?

மேக்கப் அழிந்துவிடுமா?

நீச்சல் குளத்தில் இருக்கம் சாக்ஷி அகர்வால், தண்ணீரை வலது பக்கமும் இடது பக்கமும் தள்ளிவிடுகிறாரே தவிர நீச்சல் அடிக்கவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஏன் இப்படியே தண்ணீரை தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீச்சல் தெரியாதா இல்லை மேக்கப் அழிந்துவிடும் என்று பயமா என கேட்டு வருகின்றனர்.

பத்திரமா இருங்க

பத்திரமா இருங்க

இன்னும் சில நெட்டிசன்கள் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் டயலாக்கான லெஃப்ட்ல பூசு.. ரைட்ல பூசு.. ஸ்ட்ரைட்டா பூசு என்ற டயாலாக்கை சொல்லி கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஊர் முழுக்க கொரோனா வைரஸா இருக்கு.. பாத்து பத்திரமா இருங்க என்று பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X