கிளாமரில் திணறடிக்கும் சாக்‌ஷி அகர்வால்..வர்ணித்து கவிதைபாடும் ரசிகர்கள்!

சென்னை : முன்பெல்லாம் நடிகையோ, நடிகரோ பிரபலமாவது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், தற்போது சோஷியல் மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது எளிதாகி விட்டது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ரீல், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான பாலோவர்களை வளைத்துப்போட்டுவிடுகிறார்கள்.

அப்படி இணையத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால்,எந்த எந்த புகைப்படம் போட்டாலும் லைக்ஸ் சும்மா பிச்சிக்கிட்டு போகுது.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலாவின் ரஜினிகாந்தின் மருமகளாகவும், விஸ்வாசத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

சின்ன சின்ன ரோலில்

சின்ன சின்ன ரோலில்

அதைத்தொடர்ந்து, பட வாய்ப்புக்காக அதீத கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோ மூலம், ஓரளவு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வருகிறது இருப்பினும் சாக்ஷி அகர்வாலின் திறமையை நிரூபிக்கும் அளவுக்கு அவருக்கு படவாய்ப்பு வரவில்லை.

8 படங்கள் கைவசம்

8 படங்கள் கைவசம்

பகீரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, கெஸ்ட், தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி உள்ளிட்ட 8 படங்களை கைவசம் வைத்துள்ள சாக்ஷி அகர்வால், தனது பிறந்த நாளில் அதுவுமே பிளாக் பிகினியில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்திருந்தார். அந்த போட்டோவால் இளசுகளின் தூக்கத்தை கெடுத்து திணறடித்து வருகிறார்

வித்தியாசமான ஜாக்கெட்

வித்தியாசமான ஜாக்கெட்

தற்போது, சாக்ஷி அகர்வால் லைட்வெயிட் சேலையில், வித்தியாசமான ஜாக்கெட்டுடன் விவகாரமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் அவரை வர்ணித்து கவிதைபாடாத குறையாக இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

சாய்ந்து சாய்ந்து

சாய்ந்து சாய்ந்து

ஜன்னலில் சாய்ந்து வளைந்து நின்று தனது பின்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தில் மெல்லிய சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்றாமல் தினமும் போட்டோவை பகிர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X