மொத்தமாக சில்காக மாறிய சாக்ஷி அகர்வால்.. போட்டோஷூட் பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!
சென்னை: சாக்ஷி அகர்வாலின் போட்டோஷூட்டைப் பார்த்து ரசிகர்கள் ஏகத்திற்கும் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.
முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 2.7 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சாக்ஷி அகர்வால்: அட்லீ இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்திலும், விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
படங்களில் பிஸி: அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ரசிகர்களுக்காக: சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, தினமும், வலைத்தள பக்கத்தில் அதிரிபுதிரியாக கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சில்கா மாறிட்டாங்களே: தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டி டவுசர் போட்டுக்கொண்டு, அவர் அணிந்திருக்கும் பாவாடை தாறுமாறாக கிழிந்து தொங்கி கொண்டிருக்க, விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த பேன்ஸ் ஆத்தாடி என்ன டிரஸ் இது என்றும், இவங்க மொத்தமாவே சில்கா மாறிட்டாங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











