நான் கேரள பெண் குட்டி.. மலையாள தேச உடையில் மசிய வைக்கும் சாக்ஷி அகர்வால்!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் கேரளத்து பெண்குட்டி போல இருக்கும் அட்டகாசமான போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை எடுத்து இன்று பாலிவுட்டின் ஹிட் இயக்குனர் என பெயர் வாங்கியிருக்கும் சாக்ஷி அகர்வால் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தவர் நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

actress sakshi agarwal latest photo trending on social media

நடிகை சாக்ஷி அகர்வால்: மாடல் அழகியாக கெரியரை துவங்கிய சாக்ஷி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார். ராஜா ராணி படத்தில் நடித்து அறிமுகம் ஆகி பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். இதையடுத்து விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார்.

பிக் பாஸ் வீட்டில்: இதையடுத்து,பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார் .அந்த வீட்டில் குட்டி டவுசருடன் சுற்றிய சாக்ஷி, கவினை காதலிப்பதாக சர்ச்சையில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

கைவசம் உள்ள படங்கள்: சாக்ஷி அகர்வால், தமிழில், அண்மையில் வெளியான பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படமான பிரபு தேவாவின் பகிரா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சுமார் 6 படங்களுக்கும் மேலாக கமிட்டாகி உள்ள சாக்ஷி அகர்வால், தற்போது கெஸ்ட் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குவியும் லைக்குகள்: ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரம் முழுவதும் விதவிதமான போட்டோ ஷூட் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்த புகைப்படங்களை காணவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர், நான் கேரள பெண் குட்டி போல,பாவாடை கட்டிக்கொண்டு ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும், உங்களுக்காக மட்டும் இன்னும் நிறைய வித்தியாசமான தோற்றத்தில் வர இருக்கிறேன். மலையாளப் பாடலிலிருந்து ஒரு சிறிய போஸ் என பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோவைக்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X