வாரேவா.. மைக்கல் ஜாக்சனாக மாறிய சாக்ஷி அகர்வால்.. லைக்குகளை குவிக்கும் போட்டோ!

சென்னை: பாப் மன்னன் என்று புகழப்படும் அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனை யாருக்குத்தான் பிடிக்காது. இசை உலகில் முடிசூடா மன்னனாக இருந்த இவர், இறந்து பல ஆண்டுகள் ஆன போதும், இவரை இவரது ரசிகர்கள் மறக்காமல் ஏதோ ஒரு செயல் மூலம் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அப்படித்தான் நடிகை சாக்ஷி அகர்வால் அவரைப்போலவே கருப்பு வெள்ளையில் உடை அணிந்து மைக்கல் ஜாக்சனை நினைவுப்படுத்தி உள்ளார்.

மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட சாக்ஷி அகர்வால் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே, ஒரு சில விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து, எம்பிஏ படித்துவிட்டு, ஐடியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்த போதும், சினிமா மீது இருந்த ஆர்வத்தால், அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு சினிமா பக்கம் தாவினார். பத்து வருடத்திற்கு முன்பே இவரின் சம்பளம் இரண்டு லட்சமாம். எவ்வளவு சம்பளம் வந்தா என்ன எனக்கு லட்சியம் தான் முக்கியம் என்று அம்மணி இந்த முடிவை எடுத்துள்ளார்.

actress sakshi agarwal latest photoshoot trending on social media

ராஜா ராணி படத்தில்: சாக்ஷி அகர்வாலின் ஆசைப்படியே, அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் சந்தானமும் ஆர்யாவும் வரும் காமெடி காட்சியில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த இவர், கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். மேலும், இவர் பிரபலமாவதற்கு பிக் பாஸ் சரியான பாதையாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி பவுசருடன் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த இவர், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

கைவசம் உள்ள படம்: அவர் நினைத்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு கணிசமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதைத் தொடர்ந்து டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் சாக்ஷி அகர்வால் கமிட்டாகி நடித்தார்.இதைத் தொடர்ந்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

actress sakshi agarwal latest photoshoot trending on social media

மைக்கல் ஜாக்சன்: நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தாலும், மாடல் அழகியாக இருந்தால், தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாப் இசையின் மன்னன் மைக்கல் ஜாக்சன் போல உடை அணிந்து அவரைப்போலவே மாறி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை அவர் பகிர்ந்த சில மணிநேரத்திலேயே புகைப்படத்திற்கு கீழே கமெண்டுகள் குவிந்து வருகிறது. நடிகை சாக்ஷி அகர்வாலை இரண்டு புள்ளி ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்க நினைக்கும் அவ்வப்போது இப்படி எதையாவது வித்தியாசமாக செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X