கட்சியில் சேரப் போறீங்களா ? பிக்பாஸ் பிரபலத்தை கலாய்த்த ரசிகர் !
சென்னை :அன்றாடம் தனது அழகிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சாக்ஷி அகர்வால் .
சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தனது அழகால் பல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான சாக்ஷி கன்னடா, மலையாளம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். விசுவாசம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

வெறுப்பேத்தும் சாக்ஷி
லாக் டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களது அழகான புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் அன்றாடம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்தி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி .பல டிவி ஷோஸ்களிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார் சாக்ஷி.

அன்றாட வேலை
புடவையிலும் சரி, மாடர்ன் உடைகளாக இருந்தாதும் சரி தனது கிளாமருக்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் ரசிகர்களை ஈர்ப்பதில் வல்லவராக இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் சமூகவலைதளங்களில் பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

வளைத்து போட்டு
தினம் தினம் தனது அழகிய புகைப் படங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டியும் ஆர்வம் காட்டி வருகிறார் சாக்ஷி. அவ்வப்போது இவர் வெளியிடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எப்பொழுதுமே வைரல் தான். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக எகிறி உள்ளது. அதற்கு காரணம் இவர் வெளியிடும் சரமாரியான புகைப்படங்கள் தான்.

அன் ஃபாலோ பண்றேன்
1 மில்லியன் பாலோவர்களை எட்டி உள்ளது. கட்சியில் சேரப் போவது போன்று புடவையில் பக்காவாக கட்சித் தலைவி போல போஸ் கொடுத்துள்ளார். இந்த அலப்பறையை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தும் கிண்டலடித்து வருகின்றனர். பாரு டா தலைவி எப்ப வர போறீங்க ? என்றும் கட்சியில் சேர போறீங்களா என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.மேலும் ஒருவர் இப்போவே உங்கள அன் ஃபாலோ பண்றேன் என்று விளையாட்டாக கூறியுள்ளார். இதை பார்த்த சாக்ஷி அகர்வாலும் அந்த ரசிகருக்கு ஸ்மைலி போட்டு ரிப்ளை செய்துள்ளார் .இப்படி முன்னழகு பின்னழகு என்று கவர்ச்சி காட்டி வரும் சாக்ஷி அகர்வால் நடித்து வரும் படங்கள் அனைத்தும் வெளிவர தயாராக உள்ளது.ராய்லட்சுமியுடன் சின்ரெல்லா,ஆர்யாவுடன் ரெடி படத்தையும் அரண்மனை 3 ,படத்தையும் தன் வசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











