டூ மச்சா இருக்காம்.. பிரபல பிக் பாஸ் நடிகையின் கிளாமர் செல்ஃபி.. ஆபாசமாக விளாசும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல பிக் பாஸ் நடிகை வெளியிட்டுள்ள கிளாமரான செல்ஃபி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆபாச கமென்ட்களை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர், நடிகை சாக்‌ஷி அகர்வால்.

சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

ஹீரோயின் ஓரியன்டட்

ஹீரோயின் ஓரியன்டட்

கொரோனா லாக்டவுன் காரணமாக, இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படங்களை அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார்.

சண்டைப் பயிற்சி

சண்டைப் பயிற்சி

இந்தப் படத்துக்காக, சாக்‌ஷி, சிறப்பு சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் சாக்‌ஷிக்கு முக்கிய வேடம். இவர், அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது ஒர்க் அவுட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதை எப்படி செய்வது என்று விளக்கமும் அளிப்பார்.

செல்ஃபி புகைப்படங்கள்

செல்ஃபி புகைப்படங்கள்

ரசிகர்கள் பலர் இதற்காகவே அவர் இன்ஸ்டா பக்கத்தைப் பின்பற்றுகின்றனர். தினமும் இரண்டு மூன்று புகைப்படங்களை பதிவிடும் அவர் சில நேரம், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். இப்போது அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகிறது.

ஆபாச கமென்ட்ஸ்

ஆபாச கமென்ட்ஸ்

கிளாமராக இருக்கும் அந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆபாச கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். பலர், ஆஹா, அழகு, செம என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். சிலர் ஒழுங்கான தான இருந்தீங்க.. ஏன் இப்ப கிளாமர் ஸ்டில்ஸ்? என்று சிலர் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்ஸ், மேக்கப் இல்லாமலேயே இவ்வளவு அழகா இருக்கீங்களே? என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

டூ மச்சா இருக்கு

டூ மச்சா இருக்கு

கொஞ்ச நாளா உங்க போட்டோ செஷன் டூ மச்சா இருக்கு என்று சிலரும் நாளுக்கு நாள் உங்க அழகு அதிகமாயிட்டே போகுது என்று சில நெட்டிசன்களும் கூறியுள்ளனர். உங்க முகத்துல எதையோ தடவி இருக்கீங்கன்னு தெரியுது ஒருவர் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X