சாக்ஷி அகர்வாலின் வெறித்தனமான வொர்க்அவுட்.. இப்படியே போனா எப்படி?
சென்னை : ரஜினியுடன் காலா படத்தில் அவரது மருமகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து அஜித், சுந்தர் சி என இவரது படங்கள் வெளியாகின.
இன்ஸ்டாகிராமில் இவரது கவர்ச்சி படங்களுக்காக தனியாக ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து ரசிகர்களை இவர் கவர்ந்து வருகிறார்.
தொடர்ந்து வொர்க் அவுட் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் சாக்ஷி அகர்வால் ரசிகர்களுக்கு வொர்க் அவுட் செய்வதற்கான அட்வைஸ்களையும் பகிர்ந்து வருகிறார்.

ரஜினி படத்தில் அறிமுகம்
நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர் சாக்ஷி அகர்வால். இந்தப் படத்தில் ரஜினியின் மருமகளாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் அதில் ரசிகர்களை ஈர்த்தார் சாக்ஷி. தொடர்ந்து சிறிய கேரக்டர்களே இவருக்கு கிடைத்து வருகிறது.

அஜித்துடன் நடித்த சாக்ஷி
அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கேரக்டரிலேயே நடித்தார். ஆனால் அரண்மனை 3 படத்தில் சுந்தர் சியின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் அதிகமான கவனத்தை ஈர்த்து வருகிறது. அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சாக்ஷி.

கவர்ச்சி புகைப்படங்கள்
இந்தப் புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்புகளை இவர் ஈர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த விமர்சனத்தை சாக்ஷி மறுத்துள்ளார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் இவர் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தவர். இவரது பிகினி படங்களும் ரசிகர்களின் பேவரைட் தான்.

வெறித்தனமான வொர்க்அவுட்
தொடர்ந்து தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால். வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோக்களை இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் அதிகமான வெறித்தனத்துடன் காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானாலும் தன்னுடைய வொர்க்அவுட்டை செய்ய சாக்ஷி மறக்கவில்லை.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இருந்தபோதிலும் தமிழில்தான் அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகிவரும் கெஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.


Click it and Unblock the Notifications











