Don't Miss!
- Technology
Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. அதுவும் ஒரே மாசத்துல.. காரணத்தை சொன்னா நம்புவீங்களா?
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- News
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏன் சமஸ்கிருதம் இருக்கக்கூடாது? முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பெஸ்ட் மேக்கப் எது தெரியுமா,.. சாக்ஷி அகர்வால் சொல்லியிருக்கறத பாருங்க!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை சாக்ஷி அகர்வால் பெற்றார்.
ரஜினியுடன் காலா, சுந்தர் சியுடன் அரண்மனை 3, டெடி, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
அந்த போட்டோவை என் பொண்டாட்டி தான் லீக் பண்ணா.. ’கட்டா குஸ்தி’ விஷ்ணு விஷால் விளக்கம்!

நடிகை சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். ஏராளமான ரசிகர்களை பெற்றவர். ரஜினியுடன் காலா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அதன்மூலம் பிரபலமானார். தொடர்ந்து அரண்மனை 3, டெடி, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார் சாக்ஷி.

ரஜினி, அஜித்துடன் படங்கள்
முதலில் ராஜா ராணி படத்தில் சந்தானத்துடன் நடித்த சாக்ஷி, தொடர்ந்து காலா, விஸ்வாசம் என சிறிய கேரக்டர்களாக இருந்தாலும் முன்னணி படங்களில் நடித்துள்ளார். முன்னதாக மாடலிங் மூலமாகவே தன்னுடைய பயணத்தை துவக்கிய சாக்ஷி, அதன்மூலமே சினிமா வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவும் காணப்படுகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டுவரும் கவர்ச்சிப் புகைப்படங்களை அடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது அடுத்தடுத்த கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து ஏராளமான லைக்ஸ்களும் தொடர்ந்து இவருக்கு கிடைத்து வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்பு
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா, மீரா மிதுன், கவின் உள்ளிட்டவர்களுடன் போட்டியிட்டு 49 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்டார். இதை தொடர்ந்து எலிமினேட் ஆனார். பாதி தூரம் இந்த நிகழ்ச்சியில் செயல்பட்ட சாக்ஷிக்கு இதன்மூலமும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

அடுத்தடுத்து கைவசம் 8 படங்கள்
தற்போது அரண்மனை 3 ஆகிய படங்கள் கொடுத்த புகழையடுத்து ஆயிரம் ஜென்மங்கள், புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட், 120 ஹவர்ஸ், குறுக்கு வழி உள்ளிட்ட 8 படங்கள் சாக்ஷி அகர்வால் கையில் உள்ளன. இதனிடையே சமூக வலைதளங்களிலும் அதிகமான கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது, காடு பின்புலத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிறப்பான மேக்கப்
குறிப்பாக இதே காஸ்ட்யூமில் தனியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள சாக்ஷி, முகத்திற்கான சிறப்பான மேக்கப் குறித்தும் கூறியுள்ளார். முகத்திற்கு புன்னகையை போல சிறப்பான பொலிவை தரும் மேக்கப் ஏதாவது உண்டா என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து பல புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துவரும் சாக்ஷி இந்தப் போட்டோஷுட்டில் ஜீன்ஸ் மற்றும் டாப்பில் கலக்கலான புகைப்படங்களை தந்துள்ளார்.