கிளாமர் போட்டோ ஷூட்.. யானையை பார்த்து பயந்து ஓடிய நடிகை.. தீயாய் பரவும் த்ரோபேக் வீடியோ!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட்டின் போது யானையை பார்த்து பயந்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கவினுடன் காதல்
இதில் சக போட்டியாளரான கவினை காதலித்தார். ஆனால் கவின் லாஸ்லியாவை காதலித்ததால் அவரிடம் இருந்து விலகினார். பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததால் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி.

போட்டோ ஷூட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாக்ஷிக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. படங்களில் பிஸியாக உள்ள சாக்ஷி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

பின் தொடரும் ரசிகர்கள்
சேலை, மாடர்ன் டிரெஸ் என சாக்ஷி நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்து வர்ணிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் இன்ஸ்டாவில் அவரை பின் தொடர்ந்து வருகிறது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
கடந்த சில நாட்களாக பலரும் முகம் சுளிக்கும் அளவுக்கு படு மோசமாக கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் சாக்ஷி. அண்மையில் முன்னழகு தெரிய சாக்ஷி நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றினர்.

யானை மீது சாய்ந்து
இந்நிலையில் த்ரோபேக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சாக்ஷி அகர்வால். அதில் தொடை தெரிய மாடர்ன் கவுனில் யானை மீது சாய்ந்து கை வைத்து போஸ் கொடுக்கிறார் சாக்ஷி அகர்வால்.

ஓட்டம் பிடித்த சாக்ஷி
அப்போது யானை லேசாக தலையை அசைக்க பயந்துப்போய் ஓட்டம் பிடிக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள சாக்ஷி அகர்வால் நான் ராஜாவை பார்த்து பயந்த போது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

டிரெஸ் மோசம்
சாக்ஷி அகர்வாலின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சாக்ஷி அகர்வாலின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ் மோசமா இருக்கு என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











