Summer Special: சதம் அடித்த வெயில்.. நீச்சல் குளத்திலேயே தங்கிவிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்!
சென்னை: வெயிறு வெளுத்து வாங்குவதால்,பல நடிகைகள் குளுகுளுப்பாக இருப்பதற்காக ஊட்டி, கொடைக்கானலுக்கு நடிகைகள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், இன்னும் சில நடிகைகள் நீச்சல் குளமே கதி என இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் நீச்சல் குளத்தில் குளித்து ஆட்டம் போட்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
மார்டன் அழகியான சாக்ஷி அகர்வால் சினிமாவில் பிரபலமானதை விட சோசியல் மீடியா மூலம் தான் புகழை தொட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 'எம்.பி.ஏ' படித்துவிட்டு பெரிய கம்பேனியில் HR ஆக பணியாற்றினார். அவர் வேலை பார்த்த காலத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சாக்ஷிக்கு பணத்தை விட தனது கனவின் மீது தான் ஆர்வம் அதிகமாக இருந்ததால், மாடலிங் துறையில் சேர்ந்து சின்ன சின்ன விளம்பரத்தில் நடித்தார்.

சாக்ஷி அகர்வால்: விளம்பரத்தில் நடித்துக்கொண்டே சினிமா வாய்பை தேடி வந்த சாக்ஷிக்கு ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் அது ஒரு நகைச்சுவை காட்சி என்று கூட சொல்லலாம். ஆனால், அட்லீ கதை சொல்லும் போது இப்படி ஒரு ரோலில் என்று சொல்லவில்லை என்னை ஏமாற்றிவிட்டார் என சாக்ஷி அகர்வால் இப்போது புலம்பி வந்தாலும். அந்த படத்திற்கு பின் தான், விஸ்வாசம், காலா போன்ற படத்தில் நடித்தார். அதன் பின் டெடி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை போன்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். 'ஃபயர்' படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.

சதம் அடித்த வெயில்: நடிகை சாக்ஷிக்கு கடந்த ஆண்டு நவனீத் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்தது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையுடன் இருக்கும் போட்டோவை தினமும் அப்லோடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, சதம் அடிக்கிற வெயிறுக்கு இதமாக நீச்சல் குளத்தில் தங்கி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications