3 வருடம் ஒருவரை காதலித்தேன்.. அவரின் போனுக்காக பல மணி நேரம் காத்திருந்தேன்.. மனம் திறந்த சாக்ஷி!

சென்னை : மாடல் மற்றும் நடிகையுமான சாக்ஷி அகர்வால், காலேஜில் படிக்கும் போது, ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறியுள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால், விஸ்வாசம், காலா என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு சில கதாபத்திரங்களில் ஏற்று நடித்துள்ளார்.

மாடல் அழகி சாக்ஷி அகர்வால்

மாடல் அழகி சாக்ஷி அகர்வால்

மாடல் அழகி சாக்ஷி அகர்வால் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ கோல்டு மெடல் மாணவி நான். ஒரு எம்.எல்.சி நிறுவனத்தில் நல்ல வேலை, நல்ல சம்பளம் தான் வாங்கிக்கொண்டு இருந்தேன். இருந்தாலும், ஏதோ ஒன்று வாழ்க்கையில் மிஸ் ஆவது போல் இருந்தது. அப்போது ஒரு விளம்பரத்திற்கு மாடலாக சென்றேன். அது ஒர்க் அவுட் ஆகிவிட்டதால் சினிமாவில் செட்டிலாகிவிட்டேன்.

அழகான காதல்

அழகான காதல்

தொடர்ந்து பேசிய சாக்ஷி, கல்லூரியில் படிக்கும் போது தனக்கு வந்த காதல் அனுபவத்தை ரசித்து ரசித்து கூறினார். கல்லூரி பருவத்தில் எனக்கும் காதல் வந்தது. அந்த காதல் உண்மையில் ஒரு அழகான காதல். நான் காதலித்த நபர் மிகவும் ரசிக்கக்கூடியவர். கல்லூரி ரொம்ப கண்டிப்பான கல்லூரி என்பதால் அதிகம் பேசமுடியாது. இதனால், கண்களால் மட்டுமே எங்கள் காதல் வளர்ந்தது என்றார்.

அவருக்காக காத்திருந்தேன்

அவருக்காக காத்திருந்தேன்

மூன்று ஆண்டுகள் இப்படித்தான் எங்கள் காதல் சென்றது. மாதத்தில் என்றாவது ஒருநாள் காஃபி ஷாபில் சந்தித்து பேசுவோம். அவர் கல்லூரியின் ஹாஸ்டலில் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் காலேஜ் முடிந்த பிறகு போன் பேசுவார். இந்த போனுக்காக நான் போனை பக்கத்தில் வைத்துக்கொண்டு பல மணிநேரம் காத்து இருந்தேன். அது வாழ்க்கையில் மிகவும் அழகான தருணம். காதலனை பார்ப்பதற்காக காத்திருப்பது, பேசுவதற்காக ஏங்குவது காதலின் அழகு அது இப்போது இருக்கும் இளம் காதலர்களுக்கு இல்லை என்றார்.

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பலர் அந்த காதலர் யார் என்றும், என்னது இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ மூன்று வருஷமா ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டுமே என்று சாக்ஷியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு சிபாரிசு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X