Shakshi Agarwal: சாக்ஷிக்கு வந்த அந்த ஆசை..வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ!
சென்னை: Shakshi Agarwal ( சாக்ஷி அகர்வால் வொர்க் அவுட் வீடியோ) நடிகை சாக்ஷி அகர்வால் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் மிரண்டுபோனார்கள்.
அட்லி இயக்கத்தில வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அந்த படத்தில் ஒரே ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.

இதையடுத்து இவர் கன்னடத்தில் வெளியான சாப்ட்வேர் கண்டா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகை சாக்ஷி அகர்வால்: அதனைத் தொடர்ந்து தமிழில் யோகான், திருட்டு விசிடி, அத்யன், கககபோ, உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவரது மருமகள்களில் ஒருவராக நடித்திருந்தார். அடுத்ததாக விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்த சாக்ஷி, டெடி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பாஹீரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவ்: நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷன் படத்தில் நடிகை ஆக்ஷனா பூரிக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சாக்ஷி அகர்வால் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் அப்லோடு செய்யும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல் வந்து குவியும்.

அந்த ஆசையில்: சிக்கென்று சிக்ஸ் பேக் வைத்திருப்பதில் ஆர்வம் கொண்ட சாக்ஷி அகர்வால், எப்படியாவது ஹீரோயினாகிவிட வேண்டும் என்ற ஆசையில் தினம் தினம் வியர்க்க விறுவிறுக்க மிகவும் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார். முரட்டுத்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து கொண்டு நிற்கின்றனர்.
ரசிகர்களுக்கு டிப்ஸ்: அண்மையில் தனது உடற்பயிற்சி குறித்து பேட்டி அளித்திருந்த இவர், தினமும் உடற்பயிற்சி செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று என்றார். மேலும், பீரியட்ஸ் நாட்களிலும் நான் வொர்க் அவுட் செய்வேன். இதனால் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது, மற்ற பெண்களும் தாராளமாக பீரியட்ஸ் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாம் என தனது ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











