கையில் மது.. கண்ணில் கவர்ச்சி.. பட வாய்ப்புக்காக இப்படியா? .. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
சென்னை : கையில் மதுவுடன் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இருட்டு பட நடிகை சாக்ஷி சௌத்திரி.
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாக்ஷி சௌத்திரி, நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர். சி நடித்து கடந்த வருடம் இறுதியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் "இருட்டு" இப்படத்தில் சுந்தர் .சி க்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் கன்னட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலாக இருந்து பின் சினிமாவிற்கு வந்தவர். தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முன்பெல்லாம் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு பின்னாளில் படவாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில், தன் கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இதன் பின் சுந்தர்.C உடன் இருட்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்தார். இப்படத்தில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இழந்த வாய்ப்பை பிடித்துவிடலாம் என்று பார்க்கிறார் சாக்ஷி சௌத்திரி.

தற்போதும் கூட மெத்தை மீது படுத்துக்கொண்டு தனது முன்னழகு பாதி தெரியும் அளவிற்கு, கையில் மதுவை வைத்து உச்ச கட்ட கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைபடங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் மார்கெட்டை பிடிப்பதற்காக இப்படி எல்லாம் போஸ் கொடுக்க வேண்டுமா என்று அவரை தீட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











