“ஓர் இரவுக்கு ஒரு கோடி”.. ஹெச்.ராஜா ரேஞ்சுக்கு பிளேட்டை மாற்றிப் போட்ட நடிகை சாக்ஷி சௌத்ரி!
சர்ச்சைக்குரிய அந்த டிவிட்டை தான் போடவேயில்லை என நடிகை சாக்ஷி சௌத்ரி மாற்றிப் பேசியுள்ளார்.
ஹைதராபாத்: ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி தருகிறோம் எனக் கூறி சிலர் தன்னை அழைப்பதாகத் தான் கூறவில்லை என அதிரடியாக மாற்றிப் பேசியுள்ளார் நடிகை சாக்ஷி சவுத்ரி.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சாக்ஷி சவுத்ரி. தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் ஆயிரத்தில் இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவது சாக்ஷியின் வழக்கம். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிட்டு பலர் மிக மோசமாக கமெண்ட் போடுவதும் வாடிக்கையாக உள்ளது.

ஓர் இரவுக்கு ஒரு கோடி:
இந்நிலையில், தன்னுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போகிறார்கள் என்றும், சிலர் ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் சமீபத்தில் சாக்ஷி தெரிவித்தார். மேலும், அப்படிப் பேசுபவர்கள் முட்டாள்கள் எனவும் தான் விற்பனைக்கு அல்ல என்றும் அவர் காட்டமாகக் கூறியிருந்தார்.

அதிர்ச்சி:
ஏற்கனவே மீடூ விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில், இந்த விசயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாக்ஷிக்கு ஆதரவாகப் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த சூழ்நிலையில் அதிரடியாக தான் கூறியதை அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் சாக்ஷி சவுத்ரி.

அட்மின் வேலை:
இது தொடர்பாக அவர் அளித்துள்ள புதிய பேட்டியில், ‘தான் அப்படி பதிவிடவே இல்லை' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘என் ட்விட்டர் கணக்கை வேறொருவர் கவனிக்கிறார். அவருக்கு அப்படி மெசேஜ் வந்திருக்கும், அதனால் அவர் அப்படி பதிவிட்டிருக்கலாம்' எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஹெச்.ராஜா ஸ்டைல்:
தமிழகத்தில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு விட்டு, பின்னர், ‘தான் அப்படி கூறவில்லை என் அட்மின் தான் அப்படி போட்டுவிட்டார்' எனக் கூறுவது வழக்கம். அந்தவகையில் நடிகை சாக்ஷி சவுத்ரியும் இப்படிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











