காதலர் பிறந்த நாளில் இப்படியா.. அரைகுறை உடையில் ரொமான்ஸ் செய்த இளம் நடிகை.. களைக்கட்டிய பார்ட்டி!
மும்பை: காதலரின் பிறந்த நாளை முன்னிட்டு அரைகுறை உடையில் வலம் வந்த இளம் நடிகையின் போட்டோவை வைரலாகி வருகிறது.
கான்பூரை பூர்விகமாக கொண்டவர் நடிகை சாக்ஷி மாலிக். பிரபல மாடலான சாக்ஷி விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில் இடம் பெற்ற பாம் டிக்கி டிக்கி என்ற பாடலின் மூலம் பெரும் பிரபலமானார். இந்த பாடலின் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சாக்ஷி மாலிக்.

ஏராளமான ரசிகர்கள்
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர தொடங்கினர். இன்ஜினியரிங் முடித்த சாக்ஷி மாலிக் மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் அதையே தொடர்ந்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோ
பல முன்னணி நகைக் கடைகளின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் நடிகை சாக்ஷி மாலிக். முன்னணி நடிகையாக வலம் வர ஆசைப்படும் சாக்ஷி மாலிக் கடந்த சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் கவர்ச்சி போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார்.

கிளாமர் போஸ்
பிகினி, மாடர்ன் டிரெஸ், ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ் என கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

காதலருக்கு பிறந்த நாள்
நடிகை சாக்ஷி மாலிக் சன்டல் கட்டரா என்பவரை காதலித்து வருகிறார். காதலருடன் டேட்டிங்கில் உள்ள சாக்ஷி அவ்வப்போது அவருடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் காதலரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் சாக்ஷி மாலிக்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் மார்பு வரை மட்டுமே உள்ள ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்துள்ளார். அந்த கவுனில் தொடைக்கு மேல் வரை நீண்ட ஓபன் உள்ளது. இதில் அவரது முழு தொடையும் தெரிகிறது.

மடியில் ரொமான்ஸ்
இந்த உடையில் தனது காதலரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் காதலே.. எனது சிறந்த நண்பர் மற்றும் குற்றத்தில் எனது பார்ட்னர். என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது மகிழ்ச்சியான வெர்ஷன் என்பதை எப்போதும் உறுதிசெய்ததற்கும், சிறப்பாக வளர என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி! என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சிறந்த ஜோடி
சாக்ஷி மாலிக்கின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், உலகத்திலேயே சிறந்த ஜோடி நீங்கள்தான் என பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











