2வது திருமணத்துக்குப் பிறகு செம பாலிஷாக மாறிய சமந்தா.. அடடே இதுதான் சீக்ரெட்டா?.. இதை பாருங்க!
சென்னை: நடிகை சமந்தா இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தென்னிந்திய சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இன்றைக்கு இந்திய சினிமா பிரபலமாக மாறி நிற்கிறார். சமந்தா என்றால் பெரும்பான்மையான ரசிகர்களுக்குத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது சமந்தா தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். அப்படி இருந்தும் அவர் தனது முகத்தின் பொலிவு குறிப்பாக தோலின் பொலிவு மீது எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த ரகசியத்தை தற்போது அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
சமந்தாவின் மிகவும் இளமை கால முகத்தில் தொடங்கி, சினிமா உலகில் அடுத்த கட்ட நடிகையாக வளர்ந்த காலம், முன்னணி நடிகையாக உயர்ந்த காலம், பிசியான நடிகையான வலம் வந்த காலம் என சமந்தா தனது எல்லா காலகட்டத்திலும், அவரது அழகில் பெரும் கவனம் செலுத்தி உள்ளார். என்னதான் பல விளம்பரங்களில் நடித்தாலும் நடிகைகள் பொதுவாகவே அவர்களின் அழகை பராமரிக்க தீவிரமாக கவனம் செலுத்துவார்கள்.

அப்படி சமந்தா தனது தோலின் பொலிவுக்காக எவ்வாறு எல்லாம் கவனம் செலுத்துகிறார் என்பது குறித்து தெரிவித்தும் கூடுதலாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதாவது, அந்த வீடியோவில் சமந்தா தனது முகம் தொடங்கி தனது உடல் முழுவதும் தோல் பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதையும், அதை ஒரு சிகிச்சை போல கவனமாக செய்து வருகிறார் என்பதையும் காண்பித்துள்ளார்.
சமந்தா போஸ்ட்: அந்த வீடியோவுக்கு அவர் அளித்துள்ள கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " இந்த வருசத்துலயே மிகவும் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. நான் எனது சருமத்தை மிகவும் பிரகாசமாக வைக்க எடுத்த முயற்சிகள் தான் இவை. ஆனால் காலப்போக்கில் அவை ஒரு சிகிச்சை போல மாறிவிட்டது. எனக்கு மிகவும் பிடித்தும் விட்டது.
இந்த மூன்று விஷயங்கள்: EXION RF சருமத்தை உறுதியாகவும், நீரேற்றமாகவும், பொலிவுடனும் வைத்திருக்கிறது. Aquagold அழகான மென்மையான பூச்சுடன் உடனடி பளபளப்பை சருமத்திற்கு கொடுக்கிறது. Biologique Recherche Remodeling முகத்தை பிரகாசமாக மாற்றுகிறது, தோலின் நிறத்தை அழகாக டோன் செய்கிறது மற்றும் சோர்வாக இருக்கும் சருமத்தை புதுப்பிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோவும் கேப்ஷனும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











