வெளிச்சத்தை தேடி.. சமூக வலைதளங்களில் மீண்டும் ஆக்டிவான சமந்தா.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகை சமந்தா அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 7 -8 மாதங்களாக மருத்துவமனை, சிகிச்சை என மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவின் நடவடிக்கைகளில் சமீப நாட்களில் உற்சாகம் காணப்படுகிறது.

தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து தான் கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று சில தினங்களுக்கு முன்பு தனக்கு தானே நம்பிக்கை தெரிவித்துக் கொண்டார் சமந்தா.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி என இவர் அடுத்தடுத்த மொழிப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தவர். சமீபத்தில் இவரது நடிப்பில் யசோதா படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.

யசோதா படத்தின் வெற்றி

யசோதா படத்தின் வெற்றி

பான் இந்தியா படமாக யசோதா படம் ரிலீசான நிலையில், இந்தப் படம் 10 நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் உற்சாகம் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் சமந்தாவின் முதிர்ச்சியான நடிப்பு ரசிகர்களை சிறப்பாக உணர வைத்தது.

 சாகுந்தலம் படம் ரிலீஸ்

சாகுந்தலம் படம் ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து வரும் 17ம் தேதி சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் சரித்திரப் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த சமந்தா

பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த சமந்தா

இந்தப் படத்தை தொடர்ந்து முன்னதாக சமந்தா பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தி பேமிலி மேன் 2 படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருந்தார் சமந்தா.

அரியவகை நோய் பாதிப்பு

அரியவகை நோய் பாதிப்பு

இதனிடையே மயோசிடிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. இதையொட்டி சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டிலும் பங்கேற்ற சமந்தாவின் முகம் பொலிவிழந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

சமந்தாவின் உற்சாகம்

சமந்தாவின் உற்சாகம்

இதனிடையே கடந்த சில நாட்களில் சமந்தாவின் செயல்பாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு தானே நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் பதிவுகளை செய்திருந்தார். கடந்த 7 -8 மாதங்களாக அனுபவித்த வலிகளில் இருந்து மீண்டு வருவாய் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு

இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு

இந்நிலையில் இன்று காலை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றுமொரு பதிவினை செய்துள்ளார். அதில் தான் வெளிச்சத்தை கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் மிகவும் உற்சாகமாக இருக்கும்படியான புகைப்படத்தை அவர் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

மீண்டு(ம்) வரும் சமந்தா

மீண்டு(ம்) வரும் சமந்தா

இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் சமந்தா. இவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவிற்கு அரிய வகை நோய் பாதிப்பு இருந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X