கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் ஆடையில்லாமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. 2010ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார் சமந்தா.

முதல் படத்திலேயே சிறந்த நடிகை விருது

முதல் படத்திலேயே சிறந்த நடிகை விருது

தெலுங்கு சினிமாவில் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா. தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் கடைசியாக ஜானு படம்

சமந்தா நடிப்பில் கடைசியாக ஜானு படம்

தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்தார் சமந்தா. ஜானு படம் தமிழில் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் ரீமேக் ஆகும். இதில் த்ரிஷா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் திருமணம்

நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் திருமணம்

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தி ஃபேமிலி மேன் என்ற டெலிவிஷன் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி நீக்கம்

பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி நீக்கம்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சமந்தா, சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சமந்தாவுக்கு புகுந்த வீட்டினருடன் பிரச்சனையா என கேட்டு வந்தனர் ரசிகர்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை போல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார்.

உயரும் சமந்தாவின் சினிமா மார்க்கெட்

உயரும் சமந்தாவின் சினிமா மார்க்கெட்

திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளின் மார்க்கெட் குறைந்து இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது. திருமணத்திற்கு பிறகுதான் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

காரியத்துக்காக படுக்கையை பகிரும் பெண்

காரியத்துக்காக படுக்கையை பகிரும் பெண்

அதேநேரத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சமந்தா. சமீபத்தில் அவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் வெளியானது. இதில் காரியத்துக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. இதனால் கடும் கண்டனத்திற்கு ஆளானார். அவரது கதாப்பாத்திரத்திற்காக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது.

ஃபேமிலி மேன் 2 - மன்னிப்பு கேட்ட சமந்தா

ஃபேமிலி மேன் 2 - மன்னிப்பு கேட்ட சமந்தா

இதுதொடர்பாக மவுனம் காத்து வந்த நடிகை சமந்தா அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை சமந்தா. அதாவது, வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் சமந்தா

வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் சமந்தா

கொரியன் வெப் சீரிஸ் ஒன்று ரீமேக் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தா முதன் முறையாக ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிட காட்சிகளில் ஆடையில்லாமல் நடிக்க உள்ளாராம் சமந்தா.

நிர்வாணமாய் நடித்து வாய்ப்பை இழந்த நடிகை

நிர்வாணமாய் நடித்து வாய்ப்பை இழந்த நடிகை

இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நிர்வாணமாக நடிக்கவுள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உறவு

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உறவு

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வெப் சீரிஸ்களே கதி என உள்ளார். இந்நிலையில் சமந்தாவும் ஆடையில்லாமல் நடிக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X