"கருப்பு" சமந்தா.. "வெள்ளை" போட்டோ.. அம்மணியை எப்படி பார்த்தாலும் அழகுதான்!
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை முன்னணி நட்சத்திரமாக உள்ளார் நடிகை சமந்தா.
தமிழில் விஜய், சூர்யாவுடனும் தெலுங்கில், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆருடனும் இணைந்து நடித்த முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்
இவர நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மனங்களை வென்றார்
சென்னை பல்லாவரத்தில் பிறந்த வளர்ந்தவரான சமந்தா தன்னை தமிழ் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய நடிகையாவார். இதனால் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

விண்ணைத்தாண்டி வருவாயா
தமிழில் மறக்கமுடியாத காதல் திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சமந்தா கதாநாயகியாக நடித்தார். இப்படம் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியானது. தமிழில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் தெலுங்கில் சமந்தா நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

தெலுங்கில் கலக்கினார்
இவர் ஜூனியர் என்.டி.ஆருடன் பிருந்தாவனம், மகேஸ்பாபுவுடன் தூகுடு, ராஜமௌலியின் ஈகா ஆகிய படங்களில் நடித்து தெலுங்கு திரைத்துறையை ஒரு கலக்கு கலக்கினார். ஈகா திரைப்படம் தமிழில் நான் ஈ என்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

காதல் திருமணம்
அசாத்தியமான நடிப்பு, அசால்ட்டான நடிப்பு திறமை என இன்று வரை தனது ரசிகர்களை நிலை நிறுத்தி வருகிறார். இவர் நாக சைததன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நித்தம் ஒரு படம்
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய சமந்தா நித்தம் நித்தம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் தற்போது இவர், கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படம் மிகவும் வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











