முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை சமந்தா... என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2010ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா.

சிறந்த அறிமுக நடிகை - விருது

சிறந்த அறிமுக நடிகை - விருது

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா. தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

96 ரீமேக் ஜானு படத்தில்

96 ரீமேக் ஜானு படத்தில்

தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்தார் சமந்தா. ஜானு படம் தமிழில் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் ரீமேக் ஆகும். இதில் த்ரிஷா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

நாக சைதன்யாவுடன் திருமணம்

நாக சைதன்யாவுடன் திருமணம்

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தி ஃபேமிலி மேன் என்ற டெலிவிஷன் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கிளாமரில் கவனம்

திருமணத்திற்கு பிறகு கிளாமரில் கவனம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சமந்தா, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து கிறங்க வைத்து வருகிறார். வழக்கமாக செம க்யூட் போட்டோக்களை ஷேர் செய்யும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு கிளாமரில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் தெலுங்கில் இரண்டு படங்கள்

தமிழ் தெலுங்கில் இரண்டு படங்கள்

தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரஸ்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ்

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ்

இந்நிலையில் நடிகை சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' வெப் சீரிஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ராஜ், டிகே இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸ், ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ் ரசிகர்களிடம் எதிர்ப்பையும் பெற்றது.

சமந்தாவுக்கு குவிந்த கண்டனங்கள்

சமந்தாவுக்கு குவிந்த கண்டனங்கள்

இலங்கை தமிழர்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும் தவறாக காட்டுவதாக கூறி தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ஃபேமிலி மேன் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார்.

வெறுப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

வெறுப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

அதில் பேசிய அவர் தி ஃபேமிலிமேன் 2' வெளியாகும் முன்பு வந்த கண்டனம், சீரிஸ் வெளியான பிறகு நின்று விட்டது போல் தான் எனக்கு தெரிகிறது. இருப்பினும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உண்மையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. நான் அந்த தொடரில் உள்ள ராஜி என்ற கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். எனது பங்கு அது மட்டும் தான். இருப்பினும் அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். சமந்தா மன்னிப்பு கேட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது

சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது

இதனிடையே 2021 ஆம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது 'ஷெர்னி' படத்திற்காக நடிகை வித்யா பாலனுக்கும், வெப் சீரிஸ்களில் நடித்த நடிகைகளில் 'தி ஃபேமிலி மேன் 2'வுக்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X