கொரோனா லாக்டவுனில் பரபரப்பு ஷூட்டிங்.. மாமனாரை அடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சமந்தா!
சென்னை: கடந்த 6 மாதமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாத நடிகை சமந்தா இப்போது ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

லாக்டவுன்
உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சினிமா பிரபலங்கள்
இந்த வைரஸ், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீட்டுக்குத் திரும்பினர்.

இயக்குனர் ராஜமவுலி
நடிகர் விஷால் அவர் தந்தை ஆகியோரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, தேஜா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் தனய்யாவுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் நேற்று மரணமடைந்தார்.

படப்பிடிப்புகள்
இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் கடந்த 4 மாதங்களாக தடை பட்டிருந்தன. தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் லாக்டவுனில் தளர்வுகள் செய்யப்பட்டதை அடுத்து ஒரு சில படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருந்த நடிகை சமந்தா இப்போது ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

த பேமிலி மேன்
அது விளம்பர பட ஷூட்டிங். 2 நாட்கள் இதில் பங்கேற்கிறார் அவர். ஏற்கனவே அவர் மாமனாரும் நடிகருமான நாகர்ஜூனா, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் அவர் குடும்பத்தில் இருந்து சமந்தாவும் லாக்டவுனில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். லாக்டவுனுக்கு முன்பாக, த பேமிலிமேன் வெப்சீரிஸ் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











