சோ க்யூட் சமந்தா… அசத்தல் போட்டோ ஷூட்.. பாராட்டும் ரசிகர்கள்!
ஹைதராபாத் : தென்னிந்திய ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படும் நடிகை சமந்தா ஹாலிடேவில் மாலத்தீவில் சுற்றி வந்த நிலையில் இப்போது மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பியுள்ளார்.
மாலத்தீவில் அழகிய இயற்கையை ரசித்தவாறு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் இணைய தளத்தை சுற்றிவர ரசிகர்கள் பலர் அதை ட்ரெண்டாக்கி வந்தனர்.
இந்தியா வந்த பின்னரும் போட்டோஷூட்டில் இறங்கியுள்ள சமந்தா இப்பொழுது க்யூட்டான லுக்கில் அசத்தல் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவற்றை வகுவாக பாராட்டி வருகின்றனர்.

இருவரும் முதன்முறையாக
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க அதில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.

நானும் ரவுடிதான்
விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்த "நானும் ரவுடிதான்" திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்க அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற நிலையில் இப்பொழுது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படத்தில் சமந்தாவும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

பிரம்மாண்ட திரைப்படம்
தமிழிலை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா இப்பொழுது பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சில கதைகளையும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஓடிடியில் சாதனை
ஹாலிடேவுக்கு கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவு சென்று செம ஜாலியாக பொழுதை போக்கிய சமந்தா ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய நிலையில், முதல் வேலையாக சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு அதில் சூர்யா உட்பட அனைவரின் அசாத்திய பணிகளை வியந்து பாராட்டி போட்ட பதிவு வைரலானதைத் தொடர்ந்து சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

அசத்தல் போட்டோஷூட்
மாலத்தீவில் சமந்தா எடுத்துக்கொண்ட பல போட்டோக்கள் அனைவரையும் மெய்மறக்க வைத்த நிலையில் இப்பொழுது க்யூட்டான லுக்கில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அசத்தலாக போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து அவை ரசிகர்களால் வகைவகையாக பாராட்டப்பட்டு லைக்குகளைக் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











