Samantha - கொஞ்ச நேரம்தான்... அதுக்கு 30 லட்சம் ரூபாயா?.. சமந்தா செய்யும் அட்ராசிட்டி

சென்னை: Samantha (சமந்தா) அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் சமந்தா குறித்து வெளியாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து பரஸ்பரமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Actress Samantha Charges 30 Laksh Rupees For Kushi Promotion in US

சமந்தாவின் கிராஃப்: விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.

மீண்டும் படங்களில்: மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பிய சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க கமிட்டானார்.

மீண்டும் சிகிச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மீண்டும் நோயின் தீவிரம் அதிகரித்ததாக தகவல் வெளியான சூழலில் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அவர் அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் நடிக்கிறார்.

குஷி ரிலீஸ்: சாகுந்தலம் படத்தின் படுதோல்வியை அடுத்து குஷி படத்தை அவர் ரொம்பவே நம்பியிருக்கிறார். படமானது செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. விஜய் தேவரகொண்டா சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். இதற்கிடையே சமந்தா அண்மையில் அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்காகத்தான் அவர் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. யும் அட்ராசி

Actress Samantha Charges 30 Laksh Rupees For Kushi Promotion in US

அமெரிக்காவில் ப்ரோமோஷன்: அமெரிக்கா சென்றிருக்கும் சமந்தா அங்கு குஷி படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அந்த ப்ரோமோஷன் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷன் என்றால் படத்தில் நடித்த நடிகையோ, நடிகரோ பணம் வாங்காததுதான் வழக்கம்.

வழக்கத்தை மாற்றிய சமந்தா: ஆனால் சமந்தாவோ சில மணி நேரம் மட்டுமே நடக்கவிருக்கும் ப்ரோமோஷனுக்காக 30 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அதுமட்டுமின்றி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு விற்கப்படும் டிக்கெட் இந்திய மதிப்பின்படி 12 ஆயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய்வரை விற்கப்படுகிறதாம். இதில் இரண்டு லட்சம் ரூபாய் டிக்கெட்டை வாங்கும் ரசிகர் அந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் அருகில் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவின் அட்ராசிட்டி ரொம்ப இருக்கே என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X