விவாகரத்து பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க.. புதிதாக தமிழ் படத்தில் ஒப்பந்தமான நடிகை சமந்தா!
சென்னை: விவாகரத்து பிரச்சனைகள் ஒரு புறம் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்க நடிகை சமந்தா புதிய தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா.
இந்நிலையில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது.

சோகமும் அதிர்ச்சியும்
இந்நிலையில் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நட்சத்திர ஜோடிகளான சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கர்ப்பத்தை கலைத்ததாக..
இருவரின் விவாகரத்துக்கும் காரணம் என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சமந்தாவுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடிகை சமந்தா கர்ப்பத்தை கலைத்ததாகவும் தகவல் பரவியது.

எல்லாமே வதந்தி
இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்த நடிகை சமந்தா, அதெல்லாம் வதந்தி என்று மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுபோன்று வதந்திகள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார் சமந்தா. மேலும் நாக சைதன்யா குடும்பத்தினர் தனக்கு கொடுப்பதாய் கூறிய ஜீவனாம்ச தொகை 200 கோடி ரூபாயையும் வேண்டாம் என்று உதறி தள்ளினார் சமந்தா.
Recommended Video

இரண்டு மொழிகளில் உருவாகும் படம்
இந்நிலையில் நடிகை சமந்தா தமிழில் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 30வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சமந்தா. இந்தப் படத்தை ஷாந்தா ரூபன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா தற்போது தமிழில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











