அடுத்தடுத்து 2 படங்கள்... சமந்தா காட்டில் கொட்டும் மழை... என்ன மாதிரியான படங்கள் என பாருங்கள்!
சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார்.
இருவருமே தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக தங்களின் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தனது விவகாரத்துக்கான காரணம் என பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்றும் விளக்கமளித்தார் சமந்தா.

ஃபீமேல் சென்ட்ரிக் படங்கள்
இந்நிலையில் நடிகை சமந்தா அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமானார் நடிகை சமந்தா. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ நேற்று வெளியானது. சாந்தா ரூபன் இயக்கத்தில் உருவாகும் ஃபீமேல் சென்ட்ரிக் படத்தில் நடிக்கிறார் சமந்தா.

முக்கிய கதாப்பாத்திரத்தில் சமந்தா
இந்தப் படம் நல்ல எண்டெர்டெய்னர் படமாக இருக்கும் என்றும் இதில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சாந்தா ரூபன், இயக்குநர்கள் நெல்சன் வெங்கடேசன், மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

தெலுங்கு மொழியிலும்
இந்தப் படம் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்த ஜோக்கர், மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி படங்களை போன்று இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இதேபோல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகை சமந்தா.

த்ரில்லர் படத்தில் சமந்தா
தெலுங்கில் இரட்டை இயக்குநர்கள் என அழைக்கப்படும் ஹரி மற்றும் ஹரிஷின் இயக்குத்தில் சிவலென்கா கிருஷ்ண பிரசாத் தாயரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. இந்த படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
நடிகை சமந்தா தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவர் இயக்கி வருகிறார். இதேபோல் புராணக் கதையான ஷகுந்தலம் படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறார் சமந்தா. இந்த படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











