Samantha: சர்ச்சைகள் பல கடந்த சமந்தாவின் 14 வருட சினிமா பயணம்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சினிமாவிற்குள் நுழைந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

actress Samantha completed 14 years in cinema industry

சமந்தா நடிப்பில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் வெளியான நிலையில், தற்போது, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படம் செப்டம்பர் 1ந் தேதி வெளியாக உள்ளது.

நடிகை சமந்தா: கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை சமந்தா ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடமும் இருந்து படம் ஹிட்டடித்தது.

காதல் திருமணம்: இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா ஒரு கனவுக்கன்னியாக மாறினார். நடிகை சமந்தா பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் நடந்தது.

மோசமான வதந்தி: நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதிகள் திடீரென பிரிந்தனர். இவர்கள் இருவரின் பிரிவுக்கான காரணம் தெரியாததால், சோஷியல் மீடியாவில் சமந்தா குறித்து பல மோசமான வதந்திகள் பரவின. சிகை அலங்கார நிபுணருடன் காதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என பல மோசமான வதந்திகள் பரவின.

actress Samantha completed 14 years in cinema industry

அரிய வகை நோய் : வதந்திகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மையோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். அந்த நோய்க்கு பல மாதங்கள் சிகிச்சை எடுத்து நல்லபடியாக மீண்டு வந்துள்ளார் சமந்தா.

14 ஆண்டுகள் நிறைவு: இந்நிலையில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திரைப்பயணம் குறித்து முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நியூயார்க் தான் கனவுகளை உருவாக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய முதல் படத்தின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது. அப்பொழுது சிறிய பெண்ணாக இருந்த நான். இதை எப்படி செய்து முடிப்பேன் என்று எனக்கு கவலையாக இருந்தது. ஆனால் மிகப் பெரிய கனவுக்கு தைரியம் மட்டுமே போதுமானது. இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X