திரையுலகில் 13 ஆண்டுகளை கடந்த நடிகை சமந்தா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார்.

அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் பெற்று அவரை சர்வதேச அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தன்னை சிறப்பான நாயகியாக நிலைநிறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள சமந்தாவிற்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை. பலவிதமான நெருக்கடிகளை சந்தித்தார்.

அரியவகை நோய் பாதிப்பு

அரியவகை நோய் பாதிப்பு

நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை தொடர்ந்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடல் மெலிந்து காணப்பட்ட அவர் படங்களிலும் நடிக்கவில்லை.

சிறப்பான யசோதா படம்

சிறப்பான யசோதா படம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது யசோதா படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் சிறப்பான வசூலை கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் அவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

மீண்டும் பிசியான சமந்தா

மீண்டும் பிசியான சமந்தா

மீண்டும் சமூக வலைதளங்களிலும் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார் சமந்தா. பழையபடி வெறித்தனமாக வொர்க் அவுட்களிலும் தன்னை ஈடுபடுத்தி, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பதிவிட்டு வருகிறார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்துவந்த குஷி படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

13 ஆண்டுகளை கடந்த சமந்தா

13 ஆண்டுகளை கடந்த சமந்தா

இந்நிலையில் சமந்தா சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். அவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010ம் ஆண்டில் பிப்ரவரி 26ம் தேதி வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் சமந்தா தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த நாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் கடந்து தற்போது மீண்டும் படங்களில் பிசியாகியுள்ள சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X