திருப்பி அனுப்பிடாதே.. இறுகப் பற்றிக் கொள்வாயா.. காதலில் விழுந்ததை உறுதி செய்த சமந்தா?

சென்னை: நடிகை சமந்தா இந்திய அளவில் கவனம் ஈர்த்த நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனிபன்னி வெப் சிரீஸ் வெளியானது. அது ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக புதிய வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே நாக சைதன்யாவை திருமணம் செய்து அந்த உறவிலிருந்து வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன. இந்தச் சூழலில் அவர் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் அவருக்கான கதவுகள் திறந்தன. அதன்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதலுக்கு நாக சைதன்யாவின் வீட்டிலும் முழு சம்மதம் கிடைத்தது.

Samantha Naga Chaitanya

திருமணம்: சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கோவாவில் வைத்து அவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்தார். ஆனால் அது நாக சைதனாவின் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. தொடர்ந்து நடிக்கக்கூடாது என்று அவர்கள் கண்டிஷன் போட்டதாகவும்; அதற்கு சாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்துவிட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

சைதன்யாவுக்கு திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவர்கள் இரண்டு பேருக்குமான திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா குறித்து பேசியிருந்த நாக சைதன்யா, 'சமந்தா விவகாரத்தில் என்னை மட்டும் ஏன் குற்றவாளி போல் பார்க்கிறார்கள் என தெரியவில்லை' என்றார். அதேபோல் சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து தான் எந்தவிதமான பொறாமையும் படவில்லை என்றும் கூறினார்.

மீண்டும் காதல்?: நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தாலும் சமந்தா இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். அதேசமயம் சமீபத்தில் சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சமந்தா கைகோர்த்தபடி வந்த புகைப்படம் ஒன்று ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்களோ அவர்கள் இரண்டு பேரும் காதலிக்கிறார்களா என்று சந்தேகத்தை கிளப்பினார்கள். மேலும் அவர்கள் டேட்டிங் செய்துகொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் பாலிவுட் வட்டாரத்திலிருந்து கசிந்துகொண்டிருக்கிறது.

சமந்தாவின் இன்ஸ்டா பதிவு: இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீ என் கைகளை இறுகப் பற்றிக் கொள்வாயா?.. அவர்கள் ஏதேனும் பொய் சொன்னால் என்னை திருப்பி அனுப்பிவிடாதே" என்று தனது புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, காதலில் மீண்டும் விழுந்துவிட்டதைத்தான் சமந்தா இப்படி சூசகமாக உணர்த்தியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் பதிவை பயங்கரமாக ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X