ட்விட்டரில் 10 மில்லியன் பாலோயர்களை பெற்ற சமந்தா.. எது மாறினாலும் ரசிகர்கள் அன்பு மாறாது போலருக்கே!
சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகையாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கைவசம் 4 படங்களை வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக காணப்பட்ட சமந்தா, சமீப காலங்களில் குறைவான செயல்பாட்டையே காட்டி வருகிறார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக மாறியுள்ளார் தமிழ், தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துவந்த சமந்தா தற்போது இந்திப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனால் இவரது சம்பளத்தை 4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிக வாய்ப்புகள்
தமிழ், தெலுங்கில் விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள சமந்தா, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் கேரியரையும் ஒன்றாக்காமல் தொடர்ந்து கவனமுடன் செயல்பட்டு வருகிறார். இந்தக் காரணத்தாலேயே இவரது திருமணத்திற்கு பிறகும் அதிகமான படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

யசோதா படத்தின் டீசர்
தற்போது நடிகர் நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகும் அதிகமான படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக யசோதா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வரும் 9ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியிலும் நடிக்கும் சமந்தா
இதனிடையே தி பேமிலி மேன் 2 படம் கொடுத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து தற்போது அக்ஷயுடன் இந்தியில் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர்.

இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்கள்
இன்ஸ்டாகிராமில் சமந்தா அதிகமான ஆக்டிவுடன் செயல்பட்டு வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 24 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

ட்விட்டரில் 10 மில்லியன் பாலோயர்கள்
இதனிடையே சமீபகாலங்களில் அதிகமான பதிவுகள் இல்லை என்பதால், அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் சமந்தா. இந்நிலையில் இவரை ட்விட்டரிலும் பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.

ரசிகர்களின் அன்பு
தொடர்ந்து ஆக்டிவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமந்தா மீதான ரசிகர்களின் அன்பு, ஈர்ப்பு எப்போதும் அதிகமாகவே காணப்படுகிறது.இதன் எதிரொலியாகவே தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது யசோதா படத்தின் டீசருக்காக அடுத்ததாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











