Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
க்யூட்டான சிரிப்பு..சிதறியது மனம்.. கொள்ளை அழகில் சமந்தா !
சென்னை ; கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சமந்தா போல் ஆகுமா என்று பலரை வியப்பூட்டும் படி அழகாகவும் அம்சமாகவும் கள்ளச் சிரிப்போடு ரசிகர்களின் மனதைத் திருடும் தந்திரம் தெரிந்த நடிகைதான் சமந்தா
கோலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் மார்க்கெட்டை தன் வசம் வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில் சமந்தா அவர்களை எளிதில் முறியடித்து மார்க்கெட்டில் டாப் நடிகை என்ற பெயருடன் கோலிவுட்டை கலக்குகிறார்
நயன்தாரா ,காஜல் அகர்வால், தமன்னா ,நித்யா மேனன் , அமலா பால், போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு கோலிவுட்டில் போட்டியாளராக வலம் வரும் சமந்தா கோலிவுட்டில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமா துறையிலும் ராஜாங்கம் நடத்தி வராங்க
சினிமாவில் கால் தடம்
2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் சமந்தா சமந்தா பின்பு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய விடா முயற்சியில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார் அவ்வப்போது தெலுங்கு துறையிலும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழில் வெளியான நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.
மார்க்கெட்டில் மதிப்பு
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா பின்பு அதே திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்த போது கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படம் பெரிதளவு வெற்றிபெற மார்க்கெட்டில் இடம் பிடித்தார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார் தமிழில் இளையதளபதி விஜயுடன் நடித்த கத்தி ,தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்கள் பெரிய ஹிட்டான நிலையில் மார்க்கெட்டில் சரசரவென டாப் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார் சமந்தா.
டீச்சர்
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ள நடிகை. இவருக்கு கிட்டத்தட்ட 33 வயதான நிலையிலும் தங்கச்சிலை போதும் ஜொலிக்கும் சமந்தா . திருமணம் முடிந்த பின்பும் கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை. தனது இடையை நேர்கோட்டில் வைத்துக்கொள்ள தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் சமந்தா. அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
ரசிகர் பட்டாளம்
திரைப்பட வாய்ப்புக்காக பல நடிகைகள் அரைகுறை ஆடையோடு ஆபாசமாக போஸ் கொடுக்கும் நிலையில் தனக்கென பெரும் மார்க்கெட் வைத்துக் கொண்டிருக்கும் சமந்தா தனது ரசிகர்களுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வராங்க
ரசிகர்களை மயக்கிய
நடிகை சமந்தா அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்காங்க அதை பார்த்து ரசித்த சமந்தாவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.