பணத்துக்காக இப்படி இறங்கிட்டீங்களே.. ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் சம்மு.. கடுமையாக விளாசும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை சமந்தா பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட கோடிகளில் சம்பளம் பெற்றுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. பாலிவுட்டிலும் தடம் பதிக்க தயாராகி விட்டார் நடிகை சமந்தா.

ஃபீமேல் சென்ட்ரிக் படங்கள்
மேலும் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படங்கள் ஃபீமேல் சென்ட்ரிக் படங்கள் என தெரிகிறது. வெற்றி நடிகையாக வலம் வரும் சமந்தா 30க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில்
சமந்தா நடித்துள்ள ஷகுந்தலம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இறங்கீட்டீங்களே சம்மு
ஓவர் கிளாமரில் தான் ஆடப்போகும் அந்தப் பாடலுக்காக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் நடிகை சமந்தா. இதனைக் கேட்ட ரசிகர்கள் பணத்திற்காக இப்படி ஐட்டம் பாடலுக்கு ஆடும் அளவுக்கு இறங்கீட்டீங்களே சம்மு என விமர்சித்து வருகின்றனர்.

விவகாரத்துக்கு காரணம்
நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் படுக்கையறை காட்சி உட்பட பல்வேறு சர்ச்சை காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகை சமந்தா. ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்தான் சமந்தா - நாக சைதன்யா விவகாரத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

சேலை மாடல் உடையில்
மேலும் சமீப நாட்களாக நடிகை சமந்தா அணியும் உடையும் அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்களும் சர்ச்சையாகி வருகிறது. முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடிகை சமந்த ஒவ்வொரு போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் சேலை மாடல் உடையில் படு மோசமாக பங்கேற்றிருந்தார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











